பன்னாட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

அறிவித்தல்கள்

இடம்: மெமோரியல் ஹால்
நாள்: 08-04-2009
நேரம்: மாலை 3-6 மணி

தோழர்களே! இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்வதை நிறுத்தக் கோரியும் தமிழ்ப் பகுதிகளிலிருந்து படைகளை திரும்பப் பெற கோரியும் பன்னாட்டு அளவில் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். சர்வதேச அளவில் நமக்குள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி பாசிச இலங்கை அரசு குறித்தும் இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்தும் உலக அளவிலான மனித உரிமைப் போராளிகள், தொழிலாளர் இயக்கங்கள், ஜனநாயக சக்திகள், மற்றும் இடது சாரிகள் அகியோரின் கவனத்தை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது‘இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டும் குழு’

இக்குழு இந்த நோக்கங்களுக்காக வரும் 8.04.2009 அன்று உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் சாத்தியமான அளவிற்கு ஆர்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.அதே நேரத்தில் சென்னையிலும் மேலே குறிப்பிட்டவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இலங்கையில் போரை நிறுத்துவதற்கும், தமிழர்களை படுகொலை செய்வதை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், இந்தியா உள்ளிட்ட ‘உலக நாடுகள்’ இலங்கைக்கு உதவி செய்வதை எதிர்த்தும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக பங்கு பெறுமாறு வேண்டுகிறோம்.

ஈழப் பிரச்சனையில் அக்கறை உள்ள இயக்கப் பிரதிநிதிகள் பலரும் பங்கு பெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீங்களும் பங்குபெறுவீர்!

கண்டன உரைகள்:பேரா.அ.மார்க்ஸ், ஒருங்கிணைப்பாளர் அணிதிரட்டும் குழு

கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி

பாவேந்தன், செயலர் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

முனைவர் ப. சிவக்குமார், முன்னாள் அரசுக் கல்லூரி முதல்வர்

துரைசிங்கவேல், புதிய போராளி இதழ்

அருள் எழிலன், பத்திரிகையாளர், சென்னை

மோகன்,பொதுச்செயலாளர், சென்னை பத்திரிகையாளர் சங்கம்.

உதயம் மனோகரன், மக்கள் வழக்குறைஞர் சங்கம், சென்னை.

மோகன் குமார், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், கோவை

இசையரசன், ‘தண்டோரா’ அமைப்பு

கென்னடி, மக்கள் போராட்ட மையம்,கொள்ளிடம்

கீதா, அமைப்பு சாரா தொழிலாளர் தேசீய இயக்கம்.

காதர் ஷெரீப், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்,காஞ்சிபுரம்

ஜெயக்குமார், வழக்குறைஞர், சென்னை

வெங்கட், புதிய சோசலிச மாற்று

ஜென்னி, அணி திரட்டும் குழு

இலங்கை அரசே, போரை நிறுத்து!
தமிழர்களை கொல்லாதே!
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளே! பாசிச இலங்கை அரசுக்கு உதவாதீர்!!

-இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அணிதிரட்டும் குழு

2 thoughts on “பன்னாட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

  1. Summa porniruththam entru sollamal Pasisa Pulihalidam sollungal Appavi Tamil Makkalai vidukka solli.
    Thondai kiliya neengal kaththinalum porniruththam nadakkathu, nadakkaum koodathu.
    Weliyerum makkalai suduhinrarhal.
    Pasisa Pulihalaik kappatra anaiwarum warungal entra thalaippil aarpattam seiyungal, eathawathu nadakkum,
    Athai vituvittu muthalaik kanneeer wadikkatheerhal.

  2. இப்போது நந்திக் கடலில் மிதந்துகொண்டிருக்கும் பிணங்களுக்கு இலங்கை அரசபடைகள் மட்டுமே காரணமில்லை. அரசபடையின் கொலை இலக்குகளுக்கு நேராக விடுதலைப் புலிகள் நமது மக்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். உயிருள்ள தடுப்புச் சுவர்களாக, மனிதத் தடுப்பரண்களாக மக்களைத் துப்பாக்கிமுனையில் புலிகள் தம்மோடு தடுத்து வைத்திருக்கிறார்கள். புலிகளின் கண்களில் மண்ணைத்தூவிட்டு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தப்பிவரும் மக்களைப் புலிகள் சுட்டு வீழ்த்துகிறார்கள் என வன்னியிலிருந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. எந்த மக்களைக் காப்பாற்றுகிறோம் என ஆயுதங்களை ஏந்தினோமோ, எந்த மக்களின் பணத்திலும் பவுணிலும் ஆயுதங்களை வாங்கினோமோ, எந்த மக்கள் செய்த அளப்பெரிய தியாகங்களால் நாம் நெருக்கடியான சூழல்களில் எமது உயிர்களைக் காப்பாற்றினோமோ, எந்த மக்கள் வழங்கிய துணியில் எம் நிர்வாணத்தை மறைத்தோமோ, எந்த மக்கள் போட்ட பிச்சைச் சோற்றில் இந்தத் தேகங்களை வளர்த்தோமோ அந்த மக்களையே புலிகள் இப்போது சுட்டுத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். போர் நடக்கும் நிலப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறவிடாமல் புலிகள் தடுத்து வைத்திருக்கிறார்கள். மக்களின் இரத்தத்தால் நந்திக் கடல் இப்போது நிறைந்திருக்கிறது. புலிகளும், புலிகளின் ஆதரவு அணிகளும், புலிகள் ஆதரவு ஊடகங்களும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள். இந்த இரத்தப் பழியை எந்தக் கடலில் கழுவப்போகிறார்கள்? இந்தச் செய்தியொன்றும் ‘ஒட்டுக் குழுக்கள்’ உருவாக்கி உலாவவிட்ட வதந்தியல்ல. அய்.நா.அவையும் சர்வதேச மனிதவுரிமைக் கண்காணிப்பு அமைப்புகளும் சொல்லும் செய்தியிது.

Comments are closed.