எம்.ஜி.ஆர். கொலைவழக்கு

கேளுங்கள் பௌசர்! இதுதான் கதை. இந்தக் கதையை நீங்கள் நம்பலாம் அல்லது நம்பாதிருக்கலாம். இந்தக் கதையை நீங்கள் உங்கள் பத்திரிகையில் பிரசுரிப்பதும் பிரசுரிக்காமல் விடுவதும் உங்கள் பிரச்சினை. இந்தக் கதை நடந்து அதிக நாட்களாகவில்லை. நீங்கள் பெரியார் நினைவு விழாவுக்குப் பாரிஸுக்கு வந்துவிட்டுப் போனீர்களே, அதற்கு இரண்டு நாட்கள் கழித்து எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. அன்று கடும் குளிர்நாள். மைனஸ் ஏழு என்றளவில் குளிர் வதைத்தது. நான் வெளியே எங்கேயும் போவதில்லை என்ற முடிவுடன் அறைக்குள்ளேயே […]

Continue Reading

பா.செயப்பிரகாசத்துக்கு மறுப்பு

1980களில் ஈழப்போராளிகள் தமிழகத்தை ‘பின்தளம்’ என்றே குறிப்பிடுவார்கள். ஈழப்போராட்டத்தில் தமிழக மக்களுடைய வகிபாகம் அளப்பெரிது. தமிழகத்துக் கட்சித் தலைவர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், இயக்கப் போராளிகள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், வெகுசனங்கள் எனப் பல தளங்களிலிருந்தும் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்தது. ஈழப்போராட்டத்தில் அடுத்தடுத்து கசப்பான சம்பவங்களும் வரலாற்றுத் தவறுகளும் இழைக்கப்பட்டபோதும் இன்றுவரை ஈழத் தமிழ் மக்களுக்காகத் தமிழகம் வலுவான குரலை ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஈழப்பிரச்சினையை மிகவும் பொறுப்புடனும் உணர்வுபூர்வமாகவும் தியாகங்களுடனும் அணுகுபவர்களைப் போலவே ஈழப்போராட்டத்தையும் ஈழத்தமிழர்களின் இன்னலையும் பிழைப்புவாதமாகவும் மலிவான அரசியல் […]

Continue Reading

அஞ்சலி:

பேராசான் இ.வெ.செல்வரட்ணம் அவர்கள். (1930 – 2009) இலங்கை அரசியல் ஆடுகளத்தில் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இவற்றின் தோற்றங்களை ஆய்வுறுவோருக்கும் ஆர்வலருக்கும் பேராசான் இ.வெ.செல்வரட்ணம் அவர்களின் பெயரும் இடமும் தெரியவரும். அடங்காத்தமிழர்,இரும்பு மனிதர் ,வீரமறவர், கோப்பாய்க்கோமான்……. இன்னோரன்ன தமிழ் அரசியல் அபத்தநிலைகளுக்கு முன்னர் மகத்தான நேர்மையான தமிழ் அரசியற் செல்நெறியான ‘சிறுபான்மைத்தமிழர் மகா சபையின்’ முதலீட்டாளர் பேராசான் இ.வெ.அவர்கள். இனவெறியிலும் கொடுமையான, ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளுக்கு நிகர்த்த கச்சிதமாகவும் அரக்காதும் ஒழுங்கமைக்கப்பட்ட யாழ்ப்பாண வெள்ளாள நிறுவனத்தின் ஒடுக்குமுறையை மறுத்து […]

Continue Reading

பன்னாட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

இடம்: மெமோரியல் ஹால் நாள்: 08-04-2009 நேரம்: மாலை 3-6 மணி தோழர்களே! இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்வதை நிறுத்தக் கோரியும் தமிழ்ப் பகுதிகளிலிருந்து படைகளை திரும்பப் பெற கோரியும் பன்னாட்டு அளவில் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். சர்வதேச அளவில் நமக்குள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி பாசிச இலங்கை அரசு குறித்தும் இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்தும் உலக அளவிலான மனித உரிமைப் போராளிகள், தொழிலாளர் இயக்கங்கள், ஜனநாயக சக்திகள், […]

Continue Reading

துயருறும் எழுத்து

29 மார்ச் 2009 அன்று லண்டனில் நடைபெற்ற ‘எதுவரை’ சஞ்சிகை அறிமுக அரங்கில் நிகழ்த்திய உரை: நிகழ்வுக்குத் தலைமை தாங்கிக்கொண்டிருக்கும் ராகவன் அண்ணன் அவர்களே, ‘எதுவரை’ பத்திரிகையின் ஆசிரியர் சகோதரர் பெளஸர் அவர்களே, வந்திருக்கும் தோழியர்களே, தோழர்களே பணிவுடன் வணங்குகின்றேன். நீண்ட நாட்களிற்குப் பிறகு ஈழம், புகலிடம், தமிழகம் என மூன்றுநிலத் தமிழ் எழுத்துகளை இணைத்து ஒரு காத்திரமான சிறுபத்திரிகை புகலிடத்தில் தோன்றியிருக்கும் உற்சாகமான தருணத்தில் நாமிருக்கிறோம். இந்தத் தருணத்தை பெளஸர் தனது அயராத முயற்சியால் சாத்தியப்படுத்தியிருக்கிறார். […]

Continue Reading

நினைவு ஒன்றுகூடல்

05.04.2009 ஞாயிறு மதியம் 2.30 மணியிலிருந்து இரவு 9.00 மணி வரை Wanstead Quaker Meeting House Bush Road London E11 3AU nearest tube : Leytonstone – Central Line ° நினைவு வெளியில் தோழர் பரா மாற்றுக்கருத்தும் எதிர்ப்பு இலக்கியமும் ° சிறுபான்மையினர் உரிமைகள், ஐனநாயகம், எதிர்காலம் தோழர் பரா நினைவு கலந்துரையாடல்  ° என் கமராவின் வழியே… அறிமுகம் : தமயந்தி ஒளியின் மொழியில் நாடகம் ° Twisted Things  […]

Continue Reading

யுத்தம்: தலித் கேள்வி

-சுகன் யாழ்-மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களின் அரசியற் படுகொலையில் ஆரம்பித்த தமிழ்த் தேசிய அரசியல் எவருடைய கடைசிக் கொலையில் முடிவுறும் என்று இன்னுங்கூட நிச்சயிக்கமுடியாத நிலையிலும் முடிவுறும் என்பதுமட்டும் முடிவாகத் தெரிகிறது. சமகால இலங்கை அரசியலில் சாட்சிகளாக இருப்பதைக்காட்டிலும் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது பாதுகாப்பானது என்கிற நிலைமையும் தர்க்கமும் இருந்தபோதிலும் இந்த யுத்தத்தில் சாட்சிகள், பாதிக்கப்பட்டோர், கைதிகள், காரணவர் என யாவருமே ஒன்றில் மற்றொன்றாய் மாறிமாறி வினைபுரிந்தும் தேசத்தின் முதல் மகனிலிருந்து கடைசி மனிதர்வரை பங்காளிகளாக இருக்கிறார்கள்,இருக்கக்கூடும்,இருக்கமுடியும்.எல்லோருமே ஒருவகையில் […]

Continue Reading