4 thoughts on “முதலாவது தலித் மாநாடு – பிரான்ஸ்

  1. முதலாவது தலித் மாநாடு பற்றி சிறு கருத்து

    ஒடுக்கப்பட்;ட மக்களுக்கான ஜனநாயக உரிமைக்காக போராடுவது எந்த வகையிலும் தவறில்லை. இவைகள் சீர்திருத்தம் செய்வதும் கூட தவறில்லை. முதலாளித்துவ ஜனநாயகம் மறுக்கப்பட்ட நிலையில் இருக்கும் மக்கள் பகுதியினரின் உரிமைக்காக குரல் கொடுப்பதில் எந்தத் தவறும் அல்ல இந்த வகையில் வர்ணாசிரமக் கொடுமைகளால் பாதிக்கப்படும் மக்களின் ஜனநாயக உரிமைக்காக போராடுவது எந்தக் காலதிலும் தவறானதாக கொள்ளத் தேவையில்லை.

    இலங்கையி;ல் சாதியம் அல்லது புலம்பெயர்ந்த நாடுகளில் உயிர்வாழ்கின்றதாக என்றால் நிச்சயம் பலநூறுமடங்கு உண்மையானதாகும். இதனை மறுப்பது குறுகிய நோக்கம் கொண்டதாக இருக்க முடியும். நோக்கம் என்பது பலதளங்களில் பல சந்தர்ப்ப சூழலில் தென்படுகின்றது.

    இங்கு தலித்துக்கள் என்ற சொற்லாட்சி என்பது பற்றிய கருத்துக்கு முதல் இவர்கள் வர்க்க நிலைக்கு அப்பாற்பட்டு தனித்து ஒரு மக்கள் பிரிவாக இருந்து கொள்ள முடியுமா?
    இந்த சமூகத்தில் இருந்து பொருளாதாரப்பலத்தில் இருப்பவர்கள் தமது மக்களையும் ஒடுக்காமலா அல்லது சுரண்டாமலா இருக்கப் போகின்றார்கள். (இப்படிக் கேட்டால் கட்டுப்பெட்டித் தனமாக கருத்தை மறுபடியும் கதைக்க வந்துட்டாங்கள் என> ஏற்பாட்டைச் செய்கின்றவர்கள் கூறுவர் இவை ஒருபுறமிருக்க) ஒரு மக்கள் கூட்டத்தில் இருந்து பால் ரீதியாக அல்லது மொழிரீதியாக அல்லது சாதி ரீதியாக நிலைப்பாடுகள் எடுப்பது ஒன்றும் புதிதல்ல. (தமிழ் நாட்டுக்குச் செல்லத் தேவையில்லை) இலங்கையில் தமிழ் என்ற இனரீதியாக செயற்பட்டு எந்த நிலைக்கு வந்துள்ளனர் என்பதை நாம் வாழ்ந்து கொண்டே அனுபவித்துக் கொண்டு வருகின்றோம்.

    தலித்தியத்தைக் வரையறுப்பவர்கள் இடைநிலை மக்கள் அல்லது விழிம்பு நிலை மக்கள் எனக் கொள்கின்றனர். இடைநிலை அல்லது விழிம்பு நிலை என்பது கலாச்சார பண்பாடு ரீதியாக அல்லது அறிவு (னi) ரீதியாக பின்தங்கியிருக்கின்றார்கள். என்றுதான் பொருள்படுத்த வேண்டியுள்ளது. உயர்சாதியினர் மக்கள் மற்றவர்கள் மாக்கள் என்ற கருத்துப்பாட்டிற்கு வந்திருக்கின்றனர். அல்லது வரையறுத்திருக்கின்றனர். நான் வர்க்க ரீதியாக பின்வகுப்பில் இருக்கின்றேன். அப்படிப்பட்ட என்னை எவ்வாறு நான் ஆறு அறிவுள்ள மனிதர் என்ற நிலைக்கு பொருந்தாது என்று வரையறுத்துக் கொள்ள முடியும். இடைநிலை என்றால் அங்குமில்லை இங்குமில்லை என்று வரையறுப்பீர்கள் என்றால் நான் எங்கு இருக்கின்றேன். உங்களைப் போல மேசையில் இருந்து சாப்பிடத்தெரியாதவனாக இருக்கலாம் அல்லர் உள்ளங்கையில படாது ஐந்து விரல்கால் மாத்திரம் சாப்பிடத் தெரியாதவாக இருக்கலாம் அல்லது நுனிநாக்கில் ஆங்கிலம் தெரியாதவனாக இருக்கலாம் அல்லது குடிசையில் இருக்கலாம் அல்லது நான் சிறுவயதில் இருந்தே குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் கல்வி கற்க முடியாது வேலைக்கு சென்றவனாக இருக்கலாம் அல்லது பொருளாதார அமைப்பு மாற்றத்தை நிலத்தை விட்டே நகரத்துக் துரத்தியடிக்கப்பட்ட கூலியாக இருக்கலாம் இப்படியே பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக பின்தங்கிய நிலையில் உள்ள என்னை எனது நிலையை கூறிக் கொண்டே போகலாம்.
    அப்படித்தான் உங்களைப் போல நாகரீக உலகத்தில் வாழ்கின்றதினால் என்னிடம் உள்ள ஒடுக்குமுறைச் சிந்தனை இல்லாமலா போய்விடும்?

    இவ்வாறு ஒரு மக்கள் பகுதியை வரையறுத்துக் கொள்ள கீழ்மைப்படுத்திக் கொள்ள எவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது யாரால் வழங்கப்பட்டது? இன்றைய நிலையில் அறிவைப் பெறுவது கூட பொருளாதார நிலை என்பது முக்கிய காரணமாக இருக்கின்றது. இதிலும் இந்தச் சமூகத்தில் இருந்து பெறப்படுகின்ற அறிவு கூட இந்த பொருளாதார கட்டமைப்பை பாதுகாக்கின்றதாக உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி நிலைகளில் இருக்கின்ற பாடத்திட்டம் என்பது இந்த பொருளாதார அமைப்பை மறுவுற்பத்தி செய்யும் படியானதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

  2. தலித்தியமாநாடு சிறப்பாக நடைபெற்றது. நுhற்றுக்குமேற்பட்டவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து கலந்துகொண்டது மாநாட்டின் தேவையை உணர்த்திவிட்டது.
    மாநாட்டின் தீர்மானங்களை எல்லோரும் அறியச்செய்வதும் அதை முன்னெடுத்துச்செல்வதும் சத்தியக்கடதாசியன் கடமையும் ஆகும். அதை காலந்தாழ்த்தாது செய்யவேண்டுமென வேண்டுகிறேன்.

  3. ‘இங்கு தலித்துக்கள் என்ற சொற்லாட்சி என்பது பற்றிய கருத்துக்கு முதல் இவர்கள் வர்க்க நிலைக்கு அப்பாற்பட்டு தனித்து ஒரு மக்கள் பிரிவாக இருந்து கொள்ள முடியுமா? தலித்தியத்தைக் வரையறுப்பவர்கள் இடைநிலை மக்கள் அல்லது விழிம்பு நிலை மக்கள் எனக் கொள்கின்றனர். இடைநிலை அல்லது விழிம்பு நிலை என்பது கலாச்சார பண்பாடு ரீதியாக அல்லது அறிவு (னை) ரீதியாக பின்தங்கியிருக்கின்றார்கள். என்றுதான் பொருள்படுத்த வேண்டியுள்ளது.’ என் கிறார் சர்வா. தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு புறம் ஒடுக்கப்பட்ட வர்க்கமாக இருக்கிறார்கள். மறுபுறம் பிறப்புரீதியாக தீண்டதகாதவர்களாக ஆதிக்க சாதிகளால் அடையாளப்படுத்தி புறக்கணிக்க படுகிறார்கள். வர்க்க ரீதியான போராட்டங்களில் அவர்கள் சில சமயம் உயர் சாதியை சேர்ந்தவர்களுடன் சேர்ந்து போராடினாலும் அவர்கள் சாதிரீதியாக தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டிருக்கின்றனர் என்பது யதார்த்தம். இந்த உணர்வை ஒரு வெள்ளாளன் அடைவதற்கான தேவை இல்லை. உதாரணமாக ஒரு மதுச்சாலைக்கு கருப்பனோ ஆசியனோ நுளையும் போது அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அந்த மதுச்சாலை வெள்ளை இன வெறியர் அதிகம் வரும் இடமாயிருக்கலாம். ஆனால் வெள்ளையின தொழிலாளிக்கு இந்த பிரச்சனை இல்லை. அவன் அதை விளங்கிக் கொள்ள முடியுமேயல்லாது அவன் அதனை உணர்ந்து கொள்ள முடியாது. ஏனெனில் அது அவனது வாழ்வியலில் எந்த பாதிப்பையும் செலுத்துவதில்லை. அதே போல் சாதியத்தால் தாழ்த்தப்பட்டநிலைக்கு ஆளானவன் இரு முனைகளில் பிரச்சனைகளை எதிர் கொள்ளநேர்கிறது. தலித் வர்க்க ரீதியாக தன்னை பொருளியல்சார்ந்த பிரச்சனைகளில் அடையாளம் காண்கிறான். அதே வேளை சமூக கலாச்சார அலகுகளில் தன்னை தலித்தாக அடையாளம் காண்கிறான். ஒரு புறம் சுரண்டல். மறுபுறம் அவனை மனிதனாக மதிக்க மறுக்கும் சாதிய ஒடுக்கு முறை. இந்த வகையில் பொருளாதார ஒடுக்கு முறை அவனுக்கு இரண்டாம் பட்சமாக தோன்றுவதற்கான சமூக காரணிகள் இருக்கவே இருக்கின்றன. பட்டுப் பார்த்தால் தான் சில சமயம் சிலருக்கு உண்மைகள் விளங்கும். வர்க்கம் என்பது ஏதோ தூய்மையானது இல்லை. வர்க்கப் பார்வை எனும் சிந்தனை மேற்கத்திய சிந்தனை முறை. அந்த சிந்தனை முறையை எமதுநாடுகளுக்குள் இளமை மாறாமல் புனிதம் மாறாமல் அப்படியே பிரயோகிப்பது வரட்டு தனம். சாதிக்கும் வர்க்கத்திற்குமான தொடர்புகள் பொருளியல் ரீதியாக ஒருபுறம் பார்க்கவேண்டிய அவசிய்ம் இருக்கிறது. மறுபுறம் சமூக கலாச்சார அரசியல் தளத்தில் சாதிய கருத்தியல் அதன் தாக்கம் என்பவை கவனத்தில் எடுக்கபட வேண்டும். மேல்கட்டுமானம் அடித்தளம் என்பவை இரண்டு என பார்க்கும் மரபு வழி மாக்சிய சிந்தனை முறை அடிப்படையில் விடயங்களை ஆய்ந்தால் ஆபத்தில் தான் முடியும். ஸ்டாலினும் பொல்பொட்டும் இந்த வகையறா. ஒரு மனிதன் தனது சுயமரியாதையுடன் இருக்க ஒரு சமூக கட்டுமானம் இடங்கொடுக்காவிட்டால் அவன் அதற்கு தான் முதலில் போராடுவான். தலித்தியத்தின் அடிப்படையும் அதுவே. இன ரீதியான அடையாளப்படுத்தலுக்கும் தலித்திய சிந்தனை முறைக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு.

    விளிம்புநிலை மக்கள் கலாச்சார அறிவுநிலையில் பின் தங்கி இருப்பதாக அர்த்தப்படுத்துவது அபத்தம்.
    அன்றைய தேவதாசிகளின் பரதநாட்டியம் இன்றய உயர் சாதியின் கலாச்சாரமாக திகழ்கிறது. இவ்வாறு பல உதாரணங்களை கூறலாம. அறிவை கல்வியுடன் சம்பந்தபடுத்துவது அர்த்தமற்றது. விளிம்புநிலை மக்கள் என்பவர்கள் ஆதிக்க சமூகத்தால் கல்விரீதியாக பொருளாதார ரீதியாக சமூக ரீதியாக அரசியல் ரீதியாக விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் தமது வாழ்வியல்நிலையை உயர்த்த பல்வேறு வழிகளில் தொடர்ந்து போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

  4. So, how about someone who belongs to a non- dalit demographic who acknowledges the oppression? What would be their contribution, if their can be any, between human groups?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *