நூல் மதிப்புரை: ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி / தன்வரலாறு / என். கே. ரகுநாதன். ஈழத்தில் சென்ற நூற்றாண்டின் முதல் அரைப்பகுதி வரைக்கும், ஆதிக்க சாதியினரால் உருவாக்கப்பட்ட ஒரு கொடூரமான சாதியச் சட்டம் நிலவியது. தீண்டத்காதவர்கள் என்று ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த தலித் மக்கள் வெள்ளாளர்களின் தெருக்களிலோ, வளவுகளிலோ பிரவேசிப்பதென்றால் அவர்கள் தங்களது இடுப்பில் ஒரு காவோலையைக் கட்டித் தொங்கவிட்டிருக்க வேண்டும். கழுத்திலே ஒரு கலயத்தைக் கட்டியிருக்க வேண்டும். தீண்டப்படாதோரின் காலடிச் சுவடுகள் கூடத் தீட்டாகக் கருதப்பட்டன. அந்தக் […]
மாதா
இந்த நாட்டில் அப்போது கடுமையான பனிக்காலமாகயிருந்தது. வெண்பனி விழுந்து தரையில் ஓரடி உயரத்திற்குப் பூப்போல குவிந்து கிடந்தது. அம்மா தூய பனிக்குள் தனது கால்களை மிக மெதுவாகவும் எச்சரிக்கையாகவும் எடுத்து வைத்து வீதியின் ஓரமாக ஒரு முதிய வெண்ணிற வாத்துப் போல அசைந்து நடந்துவருவதை தனது காருக்குள் இருந்தவாறே குற்றவாளி கவனித்துக்கொண்டிருந்தான். அப்போது மழை தூறத் தொடங்கிற்று. அம்மா தனது இரு கைகளையும் பக்கவாட்டில் ஆட்டியும் அசைத்தும் தனது உடலைச் சமன் செய்தவாறே வந்தார். முகத்தை வானத்தை […]
பறவையின் நுட்பம்
( ‘எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்’ நேர்காணல் தொகுப்பு நூலின் முகச் சொற்கள்) எனது முதலாவது நேர்காணலை புத்தாயிரத்தின் முதல் வருடத்தில் ‘எக்ஸில்’ இதழுக்காக பாரிஸ் நகரத்தின் கஃபே ஒன்றிற்குள் வைத்து தோழர் அ. மார்க்ஸுடன் நிகழ்த்தினேன். அடுத்த நேர்காணல் எஸ்.பொவுடன். அதுவும் பாரிஸ் நகரத்தின் ஒரு கஃபேயில்தான் நிகழ்த்தப்பட்டது. இதுவரை தமிழின் முக்கியமான இருபது ஆளுமைகளை நேர்காணல் செய்திருக்கிறேன். தோழர். கே.ஏ. குணசேகரனை பிரான்ஸ் ‘ஏ.பி.ஸி. தமிழ் வானொலி’க்காக நேர்கண்டதைத் தவிர்த்து, மற்றைய நேர்காணல்கள் […]
கேட்கப்படாத கேள்விகளும் சொல்லப்படாத பதில்களும் – நிலாந்தன்
( தமிழ்க்கவி, ஸர்மிளா ஸெய்யித், பழ.ரிச்சர்ட், கருணாகரன் நேர்காணல்கள் அடங்கிய ‘எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்’ தொகுப்பு நூலுக்கு நிலாந்தன் வழங்கியிருக்கும் முன்னீடு ) பி.பி.ஸி. தமிழோசையில் ஆனந்தி வேலை செய்த காலத்தில் கொழும்பிலுள்ள தமிழ் இயக்கங்களின் தலைவர்களைப் பேட்டி காண்பதுண்டு. இப்பேட்டிகளின்போது அவர் ஓர் அனைத்துலகப் பேரூடகத்தின் விதிகளுக்கு அமைவாகக் கேள்விகளை கேட்பவர் போல் தோன்றுவார். ஆனால் அவர் அக்கேள்விகளுக்குள் இனச்சாய்வுடைய நுட்பமான கொழுக்கிகளை மறைத்து வைத்திருப்பார். அக்கொழுக்கிகளின் மூலம் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கும் […]
வல்லினத்தின் விருது
2.11.2014ல் வல்லினம் இலக்கியக்குழு முதன் முறையாக ‘வல்லினம் விருது‘ வழங்கும் நிகழ்வை நடத்துகிறது. விருது தொகையாக 5000 ரிங்கிட்டுடன் அ.ரெங்கசாமி அவர்களின் ஆவணப்படம் மற்றும் அவரது வாழ்வைச்சொல்லும் நூலும் இந்நிகழ்வில் வல்லினம் குழுவினர் மூலம் வெளியீடு காண்கிறது. இதே நிகழ்வில் இயக்குனர் லீனா மணிமேகலையும் கலந்துகொண்டு தனது ஆவணப்படங்கள் குறித்த அறிமுகத்தைச் செய்வார். அவருடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைப்பெறும். செங்கடல் மற்றும் வெள்ளை வான் கதைகள் என ஈழ மக்களின் துயரை பதிவு செய்துள்ள லீனா மணிமேகலையுடனான […]
கண்டி வீரன்
சிலோனில் முன்னொரு காலத்தில் கண்டி வீரன் என்றொருவன் இருந்தான். அவனுக்கு ஒரு தமிழ் விடுதலை இயக்கம் மரணதண்டனையைத் தீர்ப்பளித்ததாம். பின்னொரு சந்தர்ப்பத்தில் அந்த மரணதண்டனையை அந்த இயக்கம் விலக்கியும் கொண்டதாம். கண்டி வீரனின் சரித்திரம் பற்றி இதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இத்தகைய சம்பவம் எங்களது போராட்ட வரலாற்றில் வெகு அபூர்வமாகவே நிகழ்ந்த ஒன்று. இயக்கங்களின் கைகளில் சிக்கியவர்கள் மீண்டதான நிகழ்வுகள் வெகு அரிதே. குறிப்பாக மரணதண்டனை விதிக்கப்பட்ட பின்பாக அத்தண்டனை விலக்கிக்கொள்ளப்பட்ட நிகழ்வு […]
வாழ்க
பிரபாகரன் வாழ்க பிடல் கஸ்ட்ரோ வாழ்க ரோகண விஜே வீர வாழ்க சீமான் வாழ்க சே குவேரா வாழ்க உருத்திரகுமாரன் வாழ்க லெனின் வாழ்க நிரஞ்சினி வாழ்க! பரிஸில பஸ்டில் கோட்டையிருந்த இடத்திலயிருந்துதான் எப்பயும் மேதின ஊர்வலம் தொடங்குறது. எத்தின நாட்டுச் சனங்கள், எத்தின கட்சிகள், எத்தினை கொடிகள், எத்தினையெத்தினை கோசங்கள். குர்டிஸ்காரர், பலஸ்தின்காரர், கொங்கோகாரர், மெக்சிகோகாரர், திபேத்காரர், தமிழர், சிங்களவர் எண்டு எத்தினை முகங்கள். இடைக்கிட அடிதடியும் வாறதுதான். பொலிஸோடும் வாறது, எங்கிட ஆக்களுக்குள்ளயும் வாறது. […]