யானைக் கதை

கதைகள்

மொழியியல் பேராசிரியர் கியோம் வேர்னோ ‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்துவிட்டு, கேரளாவுக்கே சென்று ஆசான் வைக்கம் முகமது பஷீரை நேரில் தரிசித்து, பிரஞ்சு மொழியில் ஒரு நீள்கட்டுரை எழுதி வெளியிட்டவர். அநேகமாக பஷீர் சந்தித்த கடைசி வெள்ளைக்காரன் இவராகத்தான் இருப்பார். அந்தப் பேராசிரியரும் நானும் ஒரே இரயில் பெட்டியில், அதுவும் அருகருகாக அமர்ந்து பயணம் செய்வோம் என நான் ஒருபோதும் நினைத்திருந்ததில்லை. அவரைக் கண்டவுடன் நான் எழுந்து நின்றேன். எழுபது வயதைக் கடந்துவிட்ட […]

இச்சா: ஈழத்தமிழரின் வலியும் வேதனையும் ததும்பிடும் துன்பியல் கதை

தோழமைப் பிரதிகள்

-ந. முருகேசபாண்டியன் ‘இலங்கைத் தீவே செத்துக் கடலில் வெள்ளைப் பிரேதமாக மிதந்து வருவதான ஒரு படிமம் இப்போது என் மனதில் தோன்றி என் இருதயத்தை முறித்துப் போட்டது.’- ‘இச்சா’ நாவலின் கதைசொல்லி. கொலைகளும், தற்கொலைகளும் நிரம்பிய சிறிய தீவான இலங்கையைச் சாபமும், இருளும் காலந்தோறும் துரத்துகின்றன. பௌத்தம் X சிறுபான்மையினரின் மதங்கள், தமிழ் X சிங்களம் என இரு அடிப்படை வேறுபாடுகளின் பின்புலத்தில் வன்மும், குரோதமும், வெறுப்பும் நாடெங்கும் பரவலானதற்குக் காரணம், வெறுமனே மதவெறி மட்டும்தானா? புத்தர் […]

இழிசெயல்!

கட்டுரைகள்

ஓர் இலக்கியப் படைப்பை எழுதி வெளியிட்டுவிட்டால், அது குறித்து வரும் எல்லாவித விமர்சனங்களையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். நமது மனதுக்குப் பிடிக்காத விமர்சனங்கள் என்றாலும் கூட அங்கீகரித்தே ஆகவேண்டும். அது இலக்கிய அறம். படைப்புக்கு வெளியே சென்று எழுதியவனின் மீது அவதூறுகளை அள்ளிக்கொட்டும் சல்லிப் பயல்கள் நிரம்பிய உலகமிது என்பதால் கவலை ஏதுமில்லை. அவற்றை மயிரெனவும் பொருட்படுத்த வேண்டியதுமில்லை. ஆனால், அந்த அவதூறுகளை ‘விமர்சனம்’ என்ற பெயரில் ஓர் இலக்கிய இதழ் வெளியிடுவது இலக்கியத்திற்குப் பிடித்த […]

மறுபடியும் மறுபடியும் பெரியாரிடம் – தொ. பரமசிவன்

நேர்காணல்கள்

தமிழறிஞரும், சமூகவியல் ஆய்வாளருமான பேராசிரியர் தொ.பரமசிவன், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார். ‘அறியப்படாத தமிழகம்’, ‘இதுதான் பார்ப்பனியம்’, ‘பண்பாட்டு அசைவுகள்’, ‘டங்கல் எனும் நயவஞ்சகம்’ போன்ற நூல்களையும் ஏராளமான சமூகவியல் – இலக்கியக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழல், சாதியம், முதலாளியம், பெரியாரியம் போன்றவை குறித்த கேள்விகளோடு, 15 சனவரி 2003 அன்று பேராசிரியர் தொ.பரமசிவனை, நண்பர் லெனா குமாரின் துணையோடு நான் பாளையங்கோட்டையில் சந்தித்து உரையாடினேன். -ஷோபாசக்தி தமிழ்நாட்டின் மைய […]

யாப்பாணச் சாமி

கதைகள்

‘குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பாணத்தான், பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி’ என்றெல்லாம் சுப்ரமணிய பாரதியார் போற்றிப் பாடிய, அருளம்பலம் சுவாமியைப் பற்றியதல்ல இந்தக் கதை. வேறொரு யாப்பாணச் சாமியைப் பற்றியே உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன். பாரதியார் புதுச்சேரியில் சந்தித்த அருளம்பலம் சுவாமி வாயைத் திறந்து பேசாத மௌனகுரு. இந்த யாப்பாணச் சாமி முற்றிலும் வேறு. என்னுடைய அம்மாவுக்கு, நான் இன்னும் கல்யாணம் செய்யாமலிருப்பது தீராக் கவலை. பெற்ற மனம் பதைக்காமலிருக்காது. அம்மா, யாப்பாணச் சாமியைத் தரிசித்து என்னுடைய எதிர்காலம் குறித்துக் […]

Conservative Estimate

கட்டுரைகள்

“நீங்கள் ஏன் புலிகள் அமைப்பில் சேர்ந்தீர்கள்” என ஊடக நேர்காணல்களில் கேள்விகள் கேட்கப்படும் போதெல்லாம், நான் சொல்லும் காரணங்களில் முதன்மையானது ‘வெலிகடைச் சிறைப் படுகொலைகள்’. 1983 ஜுலை 25-ம் தேதி குட்டிமணி, தங்கத்துரை உட்பட 35 தமிழ் அரசியல் கைதிகளும், 27-ம் தேதி டொக்டர் இராஜசுந்தரம் உட்பட 18 தமிழ் அரசியல் கைதிகளும் வெலிகடைச் சிறையில் வெட்டியும் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த 53 படுகொலைகளும் அழியாத நினைவுகளாக என் போன்றவர்களின் மனதில் இன்னுமிருக்கிறது. எப்போதுமிருக்கும். ஆனால் […]

அஞ்சலி: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

கட்டுரைகள்

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை என் காதில் அம்மாவின் குரலோ, வேறு யாருடைய குரலோ தினந்தோறும் ஒலிக்க வாய்ப்பிருந்ததில்லை. ஆனால் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் குரல் ஒருநாள் தவறாமல் எனக்குக் கேட்டுக்கொண்டிருந்தது. சிறையிலிருந்த போது கூட யாராவது ஒரு சிறைத் தோழன் அவரைப் பாடிக்கொண்டிருப்பான். எம்.ஜி.ஆர். இரசிகர்களான எங்களுக்கு எஸ்.பி.பி. எங்களுடைய ஆள் என்ற ஒரு பிணைப்பிருந்தது. ‘ஆயிரம் நிலவே வா’ எனத் தொடக்கிவைத்த வாத்தியார் ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’, ‘அவளொரு நவரச […]