பல்லிராஜா

கதைகள்

நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்மாசம்புத்தஸ்ஸ! நான், சாக்கியமுனியும் ததாகதருமான சம்புத்தர் அருளிய தம்மம் வணங்கி; இக்காலத்தில் இலங்கைத் தீவில் பெயர் பெற்றவரும், தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே கொடிய சித்திரவதைக் கூடத்திற்குள் இரகசியமாக வீழ்த்தப்பட்டவரும், தற்போது அய்ம்பத்தியிரண்டு கனிந்த வயதுகள் நிரம்பப் பெற்றவருமான சீவலி பால தேரரின் கதையைக் கூறத் தொடங்குகிறேன்! ஒரு தெருநாயே இலகுவாக வாயில் கவ்வி இழுத்துச் செல்லக் கூடியளவுக்குத் தான் சீவலி தேரரின் உடலிலுள்ள மொத்த எலும்புகளும் மாமிசமும் இருக்கும். கடுமையான நீண்ட […]

போரின் மிச்சங்கள்

கட்டுரைகள்

அ.சி. விஜிதரன் தொகுத்து, இம்மாதம் ‘சிந்தன் புக்ஸ்’ வெளியிட்டிருக்கும் ‘நான் ஏன் சட்டவிரோதக் குடியேறி ஆனேன்?’ நூலுக்கு நான் எழுதியிருக்கும் முகவுரை: “நீங்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நிலத்தைக் காட்டிலும் சமுத்திரம் பாதுகாப்பானதாக இல்லாவிட்டால், யாரும் தன்னுடைய குழந்தையைப் படகில் வைக்கப்போவதில்லை.” -வார்ஸன் ஸியர் தமிழகம் முழுவதுமிருக்கும் ஈழ அகதிகள் மறுவாழ்வு முகாம்களிலிருந்து கவிதைகளையும், கதைகளையும், கட்டுரைகளையும், ஓவியங்களையும் சேகரித்துத் தொகுக்கப்பட்டிருக்கும் இந்நூலில் பெருமளவு பங்களிப்புச் செய்திருப்பவர்கள் குழந்தைகளும் இளையவர்களுமே. அவர்களில் ஒருவரான ரா. விஷ்ணு […]

அண்ணாமலை என்ன, அமித்ஷா இலங்கைக்கு வந்தாலும் பலிக்காது!

நேர்காணல்கள்

12.05.2022 அன்று ஆனந்த விகடனில் வெளியான நேர்காணல். நேர்கண்டவர்: சுகுணா திவாகர் 1997-ல் தன் முதல் சிறுகதையை எழுதிய ஷோபாசக்தி, எழுத்துலகில் கால்நூற்றாண்டுப் பயணத்தைக் கடந்திருக்கிறார். தன் புதிய நாவல் பணிக்காகத் தமிழகம் வந்தவரைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலை, இலக்கியம், சினிமா என்று பல தளங்களில் கேள்விகளை முன்வைத்தேன். “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ “இது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான்.இலங்கையின் இடதுசாரி அறிஞர்கள் இதுகுறித்துத் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தார்கள். 1977-ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனே […]

ராணி மஹால்

கதைகள்

அப்போது நேரம் அதிகாலை அய்ந்து மணியாகிவிட்டது. வசந்தகாலம் பிறந்திருந்தது என்றாலும், ‘செய்ன்’ நதியிலிருந்து எழுந்துவந்த ஈரலிப்பான காற்றில் குளிரிருந்தது. நதிக்கரையோரமிருந்த ஒற்றையடிப் பாதையில் அன்னராணி நடந்துவந்தார். கடந்த முப்பத்தெட்டு வருடங்களாக ஒருநாள் தவறாமல், அவர் இந்தப் பாதையில் நடக்கிறார். அன்னராணி ஒற்றையடிப் பாதையின் முடிவிலிருந்த சிறிய தார் வீதியில் ஏறி, உயரமான முன் ‘கேட்’டைத் திறந்துகொண்டு சிறிய புல்வெளியைத் தாண்டி நடந்தார். புல்வெளியில் அலங்கார மின் விளக்குகள் பிரகாசித்துக்கொண்டிருந்தன. அவரின் எதிரே கம்பீரமாக ராணி மஹால் நின்றிருந்தது. […]

அரம்பை

கதைகள்

நான் மாலையில் வீடு திரும்பும்போது, என்னுடைய குதிரை வண்டிக்குக் குறுக்கே சென்ற குடிகாரர்கள் இருவரை வண்டிச் சாரதி சவுக்கால் அடித்துவிட்டான். “இறைவனால் கட்டப்பட்ட இலண்டன் நகரம் இப்போது குடிகாரர்களதும் போக்கிரிகளதும் சத்திரமாகிவிட்டது” எனச் சலிப்பாகச் சொல்லிக்கொண்டே, இரட்டைக் குதிரைகளை அவன் விரட்டினான். விடிந்தால் 26-ம் தேதி ஜூலை 1833. பிரிட்டிஷ் சாம்ராஜியத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நாள். எங்களது காலனிய நாடுகளில் அடிமை முறையை ஒழிப்பதற்கான மூன்றாவது சட்டவாக்க வரைவு நாடாளுமன்றக் கீழவையான பொதுச்சபையில் விவாதத்திற்கு வரயிருக்கிறது. […]

வம்பும் வரலாறும்

கட்டுரைகள்

க.கைலாசபதியைக் குறித்த ஒரு சாதிய வம்புச் செய்தி ஏறக்குறைய அய்ம்பது வருடங்களுக்கு மேலாகவும் தமிழ் இலக்கிய உலகில் சோர்வில்லாமல் சுற்றிவருகிறது. என்.கே. ரகுநாதன் எழுதிய ‘நிலவிலே பேசுவோம்’ சிறுகதையை ஒட்டியே இந்த வம்பு எழுந்தது. ‘நிலவிலே பேசுவோம்’ கதையின் மைய இழை இதுதான்: சிவப்பிரகாசம் என்ற ஆதிக்க சாதியைச் சேர்ந்த பிரமுகர் தீண்டாமை ஒழிப்புக் குறித்துப் பொதுவெளியில் ஆவேசமாக உரை நிகழ்த்துகிறார். ஆனால், தனது வீட்டுக்கு வரும் தாழ்த்தப்பட்டவர்களை வீட்டுக்குள்ளே அனுமதியாமல் “நிலவிலே பேசுவோம் வாருங்கள்” என […]

அம்மணப் பூங்கா

கதைகள்

தவபாலன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த மனிதரின் முகத்தைப் பார்த்தபோது, எனது கண்கள் தாமாகவே திடுமென இறுக மூடிக்கொண்டன. ஏதோவொரு கிரேக்கப் புராணக் கதையில் வரும் உருவமொன்றுதான் என் ஞாபகத்தில் மின்னலாயிற்று. நான் அச்சத்துடனோ அல்லது தயக்கத்துடனோ கண்களைத் திறந்தபோது, தவபாலன் முன்போலவே தனது தலையையும் முகத்தையும் மறைத்திருந்தார். அவரது விழிகள் மட்டும் தணல் போலத் தகித்துக்கொண்டிருந்தன. அப்போது அந்தப் பூங்காவின் மேற்குப் பகுதியிலிருந்த இடிந்த கோபுரத்திலிருந்து மூன்று தடவைகள் மணியொலித்தது. எனக்கு இந்த நகரம் முற்றிலும் […]