அந்திக் கிறிஸ்து

கதைகள்

1. கவர்னர் தூக்கத்தில் இருந்தபோது இரவேடு இரவாக அவருடைய பதவி நாட்டின் அதிபரால் பறிக்கப்பட்டிருந்தது. 2. இரவு படுக்கையில் நெடுநேரம் அமர்ந்திருந்து மிதமிஞ்சி மது அருந்தியவாறே, வானொலியில் வெளியாகிக்கொண்டிருந்த அதிபர் தேர்தல் முடிவுகளை கேட்டுக்கொண்டிருந்த கவர்னர் பிலாத்து, ஏமாற்றத்துடனும் சோர்வுடனும் மதுபோதையும் சேர அப்படியே கண்களைச் சொருகிக்கொண்டு தன்னையறியாமலேயே உறங்கிவிட்டிருந்தார். 3. இப்போது அதிபர் தேர்தலில் முன்னைய அதிபரே மறுபடியும் வென்றிருக்கிறார். வெற்றிபெற்றவருடைய எதிர் அணி வேட்பாளரிற்கு கவர்னர் பிலாத்து தன்னுடைய ஆதரவை வலுவாகவும் வெளிப்படையாகவும் வழங்கியிருந்தார். […]

இனவாதமற்ற ஓர் எதிர்காலத்தினை நோக்கி…

தோழமைப் பிரதிகள்

–மகேந்திரன் திருவரங்கன் கொழும்பு ரெலிகிராஃபில் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி வெளியாகிய Towards a Non-Racist Future என்ற கட்டுரையின் தமிழாக்கம். எட்டாங்கட்டை வாசியான எம் ஜாஃபர் நம்பிக்கையிழந்து போயிருந்தார். “பிரதான சந்தி தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் தமது கைகளைக் கட்டிய படி பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்” என அவர் முறைப்பட்டார். “கடைகள் எல்லாம் தீப்பற்றி எரிந்து கிட்டத்தட்ட 20 நிமிடங்களின் பின்னர் தாக்குதலினை மேற்கொண்டவர்களை நோக்கி சில முஸ்லிம் பையன்கள் கற்களை […]

இலங்கையில் முஸ்லீம்கள் மீதான வன்முறை: கூட்டறிக்கை

அறிவித்தல்கள்

  நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் வடக்கு கிழக்கில் பணியாற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் சிலவற்றின் கூட்டறிக்கை: -06 மார்ச் 2018 இவ்வாரம் கண்டியிலும் சென்ற வாரம் அம்பாறையிலும் முஸ்லீம் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். கண்டியிலும் அம்பாறையில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள பூர்வாங்க அறிக்கைகள், நடவடிக்கை எடுக்காத தவறால் பொலிஸாரும் இந்த வன்முறையில் கூட்டுப் பொறுப்பாளிகள் என்பதை உணர்த்தி நிற்கின்றன. வடக்கு […]

அறிஞர் யமுனா ராஜேந்திரனும் இனப்படுகொலையும்

கட்டுரைகள்

கொஞ்ச நாட்களிற்கு முன்புதான், இனி ஈழப் பிரச்சினை குறித்துத் தான் எழுதப்போவதில்லை என யமுனா ராஜேந்திரன் அறிவித்திருந்தார். ‘விட்டுதடா சனி’ எனச் சற்றே நிம்மதியாக இருந்தோம். இந்தா மறுபடியும் கிளம்பிவிட்டார். இம்முறை அவர் சொல்வது ஈழத்தில் முஸ்லீம்கள்  மீது புலிகளால் நிகழ்த்தப்பட்ட கொலைகளையும் வெளியேற்றத்தையும் ‘இனப்படுகொலை’ எனச் சொல்லக்கூடாதாம்.  அதை ‘இனச் சுத்திகரிப்பு’ என்றுதான் சொல்ல வேண்டுமாம். நேற்று, வாசு முருகவேலின் ஜெப்னா பேக்கரி நுாலிற்கு விருது வழங்கியதைக் கண்டித்து  700-க்கும் மேற்பட்ட இலங்கை முஸ்லீம்கள்  இணைந்து  […]

இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை

அறிவித்தல்கள்

கூட்டறிக்கை: இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் (தமிழ்நாடு),   25.02 .2018 அன்று  தங்களுடைய நிகழ்வில், ‘ஜெப்னா பேக்கரி’ எனும் நூலை எழுதிய வாசு முருகவேலிற்கு  விருது வழங்கி மதிப்புச் செய்ததை நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் கண்டனம் செய்கிறோம். வாசு முருகவேலால் எழுதப்பட்ட ‘ஜெப்னா பேக்கரி’ நடந்த வரலாற்று உண்மைகளை முற்றாகத் திரித்து  முஸ்லீம்களை உளவாளிகளாகவும் காட்டிக்கொடுப்பவர்களாகவும் சித்தரிக்கிறது.  அதன் வழியே, இரண்டு மணிநேர அவகாசத்தில் முஸ்லீம்கள் புலிகளால் ஆயுதமுனையில் கொள்ளையிடப்பட்டு, நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை […]

அஞ்சலி : எலிசபெத் சேதுபதி

கட்டுரைகள்

கடந்த  முப்பத்தைந்து ஆண்டுகளாக, பிரஞ்சுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியைக் கற்பித்துவந்த பேராசிரியை எலிசபெத் சேதுபதி அவர்கள்  தன்னுடைய 66-வது வயதில் இம்மாதம் 11-ம் தேதி பாரிஸில் காலமானார். இரண்டாயிரத்தின் தொடக்கத்தில், தோழர். அ.மார்க்ஸை  தலைமை  உரையாளராக அழைத்து நாங்கள் நடத்திய ‘மார்க்ஸியமும் பின்நவீனத்துவமும்’ என்ற கருத்தரங்கில்தான் நான் முதன் முதலில் எலிசபெத்தைச் சந்தித்தேன். அதன் பின்பு, சென்ற ஆண்டின் இறுதியில் அவர் நோயின்வாய் வீழும்வரை அவ்வப்போது கூட்டங்களிலும் கருத்தரங்குகளிலும் அவரைச் சந்தித்துக்கொண்டிருந்தேன். கடந்த செம்டம்பர் மாதம்,  இலக்கியப் […]

அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை.

நேர்காணல்கள்

சந்திப்பு: வெய்யில், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன் விகடன் தடம்: பெப்ரவரி 2018 படங்கள்: தி.விஜய், ரா.ராம்குமார் ஷோபாசக்தி ஈழ இலக்கியத்தின் இன்றைய முகம். போரின் அழிவுகளை, சிங்களப் பேரினவாதத்தின் இன ஒடுக்குமுறைகளை, போராளி இயக்கங்களின் தவறுகளை, புலம்பெயர் வாழ்வின் பிரச்னைகளைக் காத்திரமான மொழியில் தன் படைப்புகளில் பதிவுசெய்த படைப்பாளி. சாதி ஒழிப்புக் கருத்தியலையும் தலித்தியத்தையும் ஈழத் தமிழர்களிடத்தில் கொண்டுசெல்ல இடைவிடாது உரையாடிக்கொண்டிருப்பவர். ஷோபாசக்தியின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட அவரது படைப்பின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வார்கள். இப்போது நடிகராகவும் […]