கத்னா

நேர்காணல்கள்

உரையாடல்: இலங்கையில் கிளிட்டோரிஸ் துண்டிப்பு எங்கோ சோமாலியாவிலும் சில ஆபிரிக்கப் பழங்குடிகளிடமும் மட்டுமே இருப்பதாகப் பொதுவாக அறியப்படும் ‘கிளிட்டோரிஸ் துண்டிப்பு’ இலங்கையிலும் முஸ்லீம் சமூகத்திடையே  இரகசியமாக நீண்டகாலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பெண்ணுறுப்பில் பாலியல் உணர்ச்சி நரம்புகளின் குவியமான ‘கிளிட்டோரிஸ்’ எனும் பகுதியை குழந்தைகளுக்குத்  துண்டித்துவிடும்  அல்லது சிதைத்துவிடும் இச் சடங்கு ‘கத்னா’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இச் சடங்கில் கிளிட்டோரிஸை வெட்டித் துண்டிக்கும் அல்லது சிதைத்துவிடும் பெண்மணி ‘ஒஸ்தா மாமி’ என அழைக்கப்படுகிறார். இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்பு குறித்து […]

காயா

கதைகள்

ஒன்பது வயதுச் சிறுமியும் பாரிஸின் புறநகரான சார்ஸலின் ‘அனத்தலே பிரான்ஸ்’ பள்ளி மாணவியும் எனது உற்ற தோழன் திருச்செல்வத்தின் ஒரே மகளுமான செல்வி. காயா கொல்லப்பட்டதற்குச் சில நாட்களிற்கு முன்னதாக நடந்த ஒரு சம்பவமே ‘காயா’ என்ற இந்தக் கதையை நான் எழுதுவதற்குக் காரணமாகிறது. முதலில் காயாவின் அப்பா திருச்செல்வத்தைக் குறித்துச் சொல்லிவிடுகிறேன். நானும் திருச்செல்வமும் ஒரே கிராமத்தில் ஒரே நாளில் ஒரே மாதத்தில் 1967-ம் வருடம் பிறந்தவர்கள். முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை ஒன்றாகவே படித்தவர்கள். […]

மிக உள்ளக விசாரணை

கதைகள்

ஃப்ரான்ஸ் காஃப்காவினது புகழ்பெற்ற நாவலொன்றுக்கும் இந்தச் சிறுகதைக்கும் ஓர் ஒற்றுமையும் ஒரு வேற்றுமையுமுள்ளன. அவரது நாவலின் தலைப்பு ‘விசாரணை’. இந்தக் கதையின் தலைப்பு ‘மிக உள்ளக விசாரணை’. வேற்றுமை என்னவென்றால், காஃப்காவினது நாயகனுக்கு ஒரு கவுரவமான பெயர் கிடையாதெனினும் அவனை ‘K’ என்ற ஓர் எழுத்தாலாவது காஃப்கா குறித்துக்காட்டினார். நம்முடைய நாயகனுக்கு அதற்குக் கூட வக்கில்லை. இப்போது நாங்கள் நேரடியாகவே கதைக்குச் சென்றுவிடலாம். எண்பத்தைந்து மனித மண்டையோடுகளும் குவியலாக மனித எச்சங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்ட, இருபத்தைந்து வருடங்களிற்கு முந்தைய […]

பத்மநாபம் 15

கட்டுரைகள்

‘ஐயர்’ என்பது சாதிப்பட்டமில்லை அதுவொரு பெயரே எனச் சொல்பவர்களுடன் வாதிடுவது வெட்கக்கேடானது. சூடு சுரணையே இல்லாத சாதிய மனங்களவை. எனவே ‘ஐயர்’ என்பது சாதிப்பட்டமே என ஒப்புக்கொண்டு, ஆனாலும் ‘சாதிப்பட்டத்தை வைத்துக்கொள்ளவும் ஒரு காரணம் இருக்கிறதுதானே’ எனக் காரணங்களைக் கண்டுபிடிப்பவர்களிற்காக ஒரு குறிப்பு: ஏன் இப்போது திடீரென பத்மநாப ‘ஐயர்’ பிரச்சினை கிளம்புகிறது? இதுவரை ஏன் யாரும் பேசவில்லை? எனக் கேட்கிறார்கள். உண்மையில் இது திடீர் எதிர்ப்பல்ல. இந்த எதிர்ப்புக்கு பதினைந்து வருடத் தொடர்ச்சியான வரலாறும் பதிவுமுள்ளன. […]

வாசகசாலை: மனதிற்கான வைத்தியசாலை

அறிவித்தல்கள்

வாசிப்பு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மனதுக்குப் பிடித்த புத்தக வாசிப்பானது, நோயாளிகளை விரைவில் குணப்படுத்த ஏதுவாகும். அவர்களது மனதை சாந்தப்படுத்தும். வெளிநாடுகளில் நோயாளிகளை விரைவில் குணமடையச் செய்ய இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். அந்த நடைமுறை, இலங்கையிலுள்ள அநேகமான வைத்தியசாலைகளில் பின்பற்றப்படுவதில்லை. காரணங்கள் பலவற்றைச் சொல்லலாம். இலங்கையிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும், அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளை, ‘நாம் நோயாளிகள்’, ‘நாம் பலவீனமானவர்கள்’ என உணரச் செய்துகொண்டேயிருக்கின்றன. இதே நிலைப்பாடுதான் நோயாளிகளுடன், அவர்களுக்கு உதவுவதற்காக, கூடத் தங்க நேர்பவர்களுக்கும். அந்த மந்த […]

அன்புள்ள ஜெயமோகன் : சில கேள்விகள்

கட்டுரைகள்

அன்புள்ள ஜெயமோகன், ‘தடம்’ இதழ் நேர்காணலில் நீங்கள்,  ‘இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை’ என்று கூறியதன் பின்பாக,  அக்கருத்தை மேலும் நியாயப்படுத்துவதற்காக உங்களுடைய வலைப்பதிவில் நீங்கள் எழுதிய இலங்கை ‘இனப்படுகொலை’ பற்றி… என்ற கட்டுரை தொடர்பாகவே இந்த மின்னஞ்சலை உங்களிற்கு அனுப்புகின்றேன். ‘இலங்கையில் இனப் படுகொலை நிகழவில்லை’ என்று கூறியதற்காக உங்களை இந்திய அரசின் கைக்கூலி என்றோ தமிழின விரோதி என்றோ நான் ஒருபோதும் கூறப்போவதில்லை. அதேபோன்று ‘இலங்கையில் நிகழ்ந்தது இனப் படுகொலையே’ என்று ஆணித்தரமாகக் கூறுபவர்கள் எல்லோரையுமே ‘சுத்தமான […]

விருது ஏற்புரை

கட்டுரைகள்

வாசகத் தோழர்களிற்கும் என் உடன் எழுத்தாள நண்பர்களிற்கும் இந்த அவைக்கும் எனது பணிவான வணக்கங்கள். இந் நிகழ்வில் நேரில் கலந்துகொள்ள முடியாததையிட்டுச் சற்று வருத்தமே. டொரொன்ரோ இலக்கியத் தோழர்களோடு இந்த வெயில் காலத்தில் சற்று மதுவருந்தி, கதையும் பாட்டுமாக தருணங்களைக் கழிக்க நினைத்தது கைகூடவில்லை. என்னுடைய கவிதையொன்று 1985-ல், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘ஈழமுரசு’ பத்திரிகையில் வெளியாகியதிலிருந்து -அதாவது சரியாக முப்பது வருடங்களிற்கு முன்னரிருந்து – நான் எழுதிக்கொண்டிருந்தாலும் ஈழத்தவர்களின் அல்லது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பொன்றிடமிருந்து நான் முதன் […]