அவ்வப்போது என்னைக் குறித்து ஏதாவதொரு வம்புச் செய்தியை, முகநூல் வம்பர்கள் கூட்டாகப் பரப்பிவிடுகிறார்கள். அந்தவகையில் புதிய வம்புச் செய்தி: ஷோபாசக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கிறார். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிற்போக்குத்தனங்கள் குறித்து அவருக்கு விமர்சனங்கள் இல்லை. இதைக் கொஞ்சம் விளக்கிவிடுகிறேன். ‘யாவரும்.காம்’ இணைய இதழுக்கு கொடுத்த நேர்காணலில் நான் சொல்லியிருந்த ஒரேயொரு வாக்கியத்தை முன்வைத்தே, இந்த வம்புப் பேச்சு கிளப்பிவிடப்பட்டிருக்கிறது. அந்த நேர்காணலில் நான் இவ்வாறு சொல்லியிருந்தேன்: “தேர்தல் காலங்களில் என்னுடைய ஆதரவை ஆயிரத்தெட்டு […]
இது ஆவண தர்மமல்ல!
-மு.நித்தியானந்தன் சோமிதரனும் சயந்தனும் இணைந்து தயாரித்து வெளியிட்ட, 3.07 நிமிட காணொளி எழுப்பும் கேள்விகள் பல. இது எப்போது பதிவு செய்யப்பட்டது? இதில் திரு. செல்லன் கந்தையா அவர்களுடன் பேட்டி காண்பவர் யார்? இது எங்கே பதிவு செய்யப்பட்டது? ஒரு நம்பகமான ஒளிப்பட ஆவணம் தர வேண்டிய அடிப்படை விவரங்கள் இவை. சும்மா எடுத்தமேனிக்கு ஒரு காணொளியை வெளியில் உலவவிடுவீர்களா? சோமிதரனும் சயந்தனும் யாழ்ப்பாணத்தில் ஒரு ஒளிப்படக்காரரை அமர்த்தி, கேள்விகளை அவருக்கு அனுப்பி இந்தப் பேட்டியை எடுத்தார்களா? […]
அந்த மூன்று நிமிடச் சாட்சியம்
நண்பர்கள் சயந்தனும், சோமிதரனும் இன்று வெளியிட்டிருக்கும், ஒரு மூன்று நிமிட நேரக் காணொளி குறித்துப் பேசிவிட நினைக்கிறேன். இற்றைக்குப் பதினேழு வருடங்களுக்கு முன்னதாக, யாழ் பொதுநூலக நிலையத் திறப்புவிழா தடுத்து நிறுத்தப்பட்டது நாம் அறிந்ததே. அது ஏன் தடுத்து நிறுத்தப்பட்டது, எப்படித் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதில் மாறுபட்ட கருத்துகள் சொல்லப்படுவதுண்டு. தடுத்து நிறுத்திய புலிகள் அதற்கான காரணத்தை எப்போதுமே சொன்னதில்லை. அப்போதைய மேயர் செல்லன் கந்தையன் தலைமையில், வீ. ஆனந்தசங்கரி அந்த நூலகத்தைத் திறந்துவைப்பதாக இருந்தது. திறப்புவிழா […]
புலியூர் முருகேசன் அவர்களுக்கு!
அண்ணே வணக்கம்! என்னைக் குறித்து உருட்டல்கள் நடந்துகொண்டிருந்த ஒரு முகநூல் திரிக்கு நீங்கள் சென்று, “ஷோபாசக்தி இங்கே வந்து பதிலளிப்பார் என எனக்கு நம்பிக்கையிருக்கிறது” என எழுதியிருந்ததைப் பார்த்தேன். உங்களது நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கியதற்காக முதற்கண் என்னை மன்னித்துவிடுங்கள். நான் சிலருடன் அல்லது சில தளங்களில் விவாதத்தில் இறங்குவதில்லை என்பதைக் கொள்கையாகவே வைத்துள்ளேன். என்னுடைய சக்தியைத் தேவையில்லாமல் செலவழிக்கக் கூடாது என்பது ஒருபுறமிருக்க, அந்த இடங்களில் விவாதிப்பது யாருக்கும் எந்தப் பயனையும் தரப்போவதில்லை என்று கருதுவதாலேயே அங்கெல்லாம் விவாதம் […]
விகடன் விருதுகளை திரும்ப ஒப்படைக்கிறேன்
மூன்று தடவைகள் ‘விகடன்’ விருதுகளைப் பெற்றிருக்கிறேன் (வேலைக்காரிகளின் புத்தகம், எம்.ஜி.ஆர் கொலை வழக்கு, BOX). இந்த விருதுகளுக்காக என்னைத் தேர்வு செய்தவர்கள் விகடன் குழுமத்திலிருந்த எழுத்தாளத் தோழர்கள். அது மட்டுமல்லாமல் விகடன் பல முறை என்னிடம் கட்டுரைகளையும் நேர்காணல்களையும் கேட்டுப் பெற்று வெளியிட்டதற்குக் காரணமும் இந்த எழுத்தாளத் தோழர்களே. இன்று எழுத்தாளத் தோழர்களும் மற்றும் பணியாளர்களும் விகடன் குழுமத்திலிருந்து பெருந்தொகையில் வெளியேற்றப்படுவதைக் கண்டித்தும் அந்த வெளியேற்றத்திற்கு எதிராகப் போராடும் தோழமைகளுக்கான ஒரு சிறிய துணைச் செயற்பாடாகவும், மூன்று […]
நிகழாத விவாதம்
வசுமித்ர எப்போதும் போலவே, இப்போதும் அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி எழுதிய முகநூல் வசைகள், எனக்கும் அவருக்குமிடையே நடந்த விவாதத்தின் போதே எழுதப்பட்டன என்பதுபோல ஒரு பேச்சிருப்பதால், அதை விளக்கிடவே இக்குறிப்பை எழுதுகிறேன். ரங்கநாயகம்மாவின் அந்த ‘அம்பேத்கர் தூஷண’ நூல் வெளிவந்து முழுதாக 4 வருடங்களாகின்றன. சில நண்பர்கள் சொல்வதுபோல, ஏதோ கவனம்பெறாமல் மூலையில் கிடந்த வசைக் குப்பையல்ல அது. அந்தக் குப்பை பரவலாகவே இறைக்கப்பட்டது. 4 மாதங்களில் அந்நூலுக்கு 3 பதிப்புகள் வந்தன. அந்நூலை வரவேற்றுக் கூட்டங்கள் […]
நான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை
யாவரும்.காம் இணைய இதழுக்காக நேர் கண்டவர்: அகர முதல்வன் எழுத்தாளர் ஷோபாசக்தி – தமிழ் இலக்கியத்தோடு பரிட்சயமானவர்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். தன்னுடைய படைப்புக்களின் மூலம் ஈழத்தமிழ் வாழ்வியலை எழுதி வருபவர். தனக்கான கதை சொல்லும் முறை, பகிடி, அரசியல் சாடல்கள் என நிறைய அம்சங்களால் தனது படைப்புலகை உண்டு பண்ணியிருக்கிறவர். அவரின் படைப்புக்கள் மீது கடுமையான விமர்சனம் கொண்டவர்களும் ஏராளம். அவருடைய மிகச் சமீபத்தில் வெளியான “இச்சா” நாவலை “கருப்பு பிரதிகள்“ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. […]