ஈஸ்டர் கொலைகள்

கட்டுரைகள்

இந்த தேவாலயத்தை நிர்மூலமாக்கினாலும், மூன்றே நாட்களில் கட்டியெழுப்புவேன் -இயேசுக் கிறிஸ்து நேற்று இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளால் நிகழ்ந்த புகை அடங்க முதலே, இஸ்லாமியர்கள் மீதான பழிப்பும், வன்மம் மிக்க நினைவுகூறல்களும் சமூக வலைத்தளங்களில் புகையத் தொடங்கிவிட்டன. இலங்கையில் அமைதியே இருக்கக்கூடாது, இரத்தமும் குண்டும் கொலையும் பழிவாங்கல்களும் தொடர்ந்துகொண்டேயிருக்க வேண்டும் என்ற இரத்த வேட்கை, புலம் பெயர்ந்த எளிய தமிழ்ப் பிள்ளைகளின் முகப்புத்தகங்களில் வழிந்துகொண்டேயிருக்கிறது. இதுவரை கிடைத்த ஊடகச் செய்திகளின்படி, இந்தக் குண்டுவெடிப்புகளை சர்வதேச வலைப்பின்னலிலுள்ள இலங்கையர்களான […]

லஷ்மி மணிவண்ணனுக்கு ஷோபா..

கட்டுரைகள்

‘ஷோபாசக்திக்கு லஷ்மி மணிவண்ணன்’ என மணிவண்ணனுடைய ஒரு முகப்புத்தகப் பதிவை ஜெயமோகன் தனது தளத்தில் பதிவேற்றியுள்ளார். முகப்புத்தகத்தில் மணிவண்ணனின் பதிவுக்கு உடனடியாகவே பதில் அளித்திருந்தேன். அதையும் சேர்த்து ஜெயமோகன் பதிவேற்றியிருந்தாரெனில் முழுமையாக இருந்திருக்கும். என்னிடம் மட்டும் வலைத்தளம் இல்லையா என்ன..என்னுடைய பதிலை நான் இங்கு மறுபதிவு செய்துவிடுகிறேன்: இலக்கியத்தில் மதிப்பீடுகளின் அவசியத்தை ஓர் எழுத்தாளர் உணராமல் இருக்கமுடியாது. ஆனால் நிர்ப்பந்திக்கப்படும் விதிகளும் சட்டகங்களும் தடைக்கற்கள். அந்த விதிகள் மார்க்ஸியம் சார்ந்து வைக்கப்பட்டாலென்ன தேசியம் சார்ந்து வைக்கப்பட்டாலென்ன அழகியல் […]

பெரியாரியர்களைப் பொறுத்தவரை மகாபாரதமும் அரசியல் பிரதிதான்!

நேர்காணல்கள்

நேர்கண்டவர்: த.ராஜன் இந்து தமிழ்: 18 -11- 2018 சமகாலத் தமிழின் முதல்நிலை எழுத்தாளன் என்பதைத் தாண்டி கூத்துக் கலைஞன், போராளி, சர்வேத அடையாளம் கொண்ட திரைப்பட நடிகர் என்று பல்வேறு முகங்களையுடைய ஷோபாசக்தியின் வாழ்க்கைப் பயணம் பல்வேறு திருப்பங்களைக் கொண்டது. கடந்த 40 ஆண்டுகளில் ஈழத் தமிழர்கள் அடைந்த நெருக்கடிகள், குறுக்குவெட்டாக மேற்கொண்ட பயணங்கள், சந்தித்த முரண்பாடுகளை உலகளாவிய இலக்கியமாக மாற்றிய அரிதான தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். ‘கொரில்லா’, ‘ம்’, ‘பாக்ஸ்: கதைப்புத்தகம்’ ஆகிய நாவல்கள் […]

தடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண்

தோழமைப் பிரதிகள்

-Élie Castiel தமிழில்: சதா பிரணவன் இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் லெனின் எம் சிவத்தின், முந்தைய இரண்டு தமிழ் -கனடிய திரைப் படங்கள் 1999(2009) மற்றும் A gun and a ring (2013) . இப்படங்கள் ஆங்கில subtitles-களுடன் உருவாக்கப்பட்டவை. கனடாவில் பல்வேறு சமூகங்களின் ஒன்றிணைவு உண்மையில் வரவேற்கத்தக்கது. முதல் இரண்டு படங்களும் ‘action’ வகை சார்ந்தவை.ஆனால் லெனின் எம் சிவத்தின் புதிய படமான ‘ROOBHA’ முற்றிலும் வேறுபட்ட கருப்பொருளைக் கொண்டுள்ளது . இத் […]

இப்ப இல்லாட்டி எப்ப!

கட்டுரைகள்

இன்று தொடங்கியிருக்கும் யாழ் சர்வதேசத் திரைப்பட விழாவில், வரும் 5ம் தேதி மாலை 6.45 மணிக்கு திரையிடப்படுவதாக விழாக் குழுவினரால் அறிவிக்கப்பட்டு உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலிலும் சேர்க்கப்பட்டிருந்த ஜூட் ரட்ணத்தின் ஆவணப்படமான ‘Demons in Paradise’ இப்போது நிகழ்ச்சி நிரலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்கும் கண்டனத்திற்குமுரியது. இதையொத்த சம்பவமொன்று எங்களது ‘செங்கடல்’ திரைப்படத்திற்கும் நிகழ்ந்திருந்தது. செங்கடல் தயாரிப்பில் இருக்கும்போதே அது புலிகளிற்கு எதிரான படம் – இலங்கை அரசிற்கு எதிரான படம் என்றெல்லாம் ஊகங்கள் ஊடகங்களில் வெளியாகின. 2010 […]

Film unscheduled and censored at the Jaffna International Cinema Festival

அறிவித்தல்கள்

Dear Sir/Madam, TO WHOM IT MAY CONCERN: Allegedly owing to pressure from a group known only as the ‘Community’ in Jaffna, the festival organizers of the Jaffna International Cinema Festival have decided to remove the film DEMONS IN PARADISE directed by me from its scheduled program. Thus far I have not been given a proper […]

ஈழமும் கலைஞரும் – ஆனந்த விகடன்

கட்டுரைகள்

“அப்போது தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். தமிழ் பிரச்னைகள் பற்றிப் பேசுபவர்கள் அண்ணாத்துரை, கருணாநிதி, தமிழரசுக்கட்சி என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை’’ – இவ்வாறு தொடங்கித் தனது சுயசரிதையை எழுதியிருப்பவர் புலிகள் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும் புலிகளின் முதலாவது மத்தியக்குழு உறுப்பினருமான கணேசன். ஈழத்தில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பரந்துபட்ட இளைஞர்களிடையே முதன்மையான தமிழ் உணர்வுப் படிமம் கலைஞர் மு.கருணாநிதி. இன உணர்வு, மொழிப்பற்று, கடவுள் மறுப்பு, கலையை சமூக நீதிக்காகவும் அரசியலுக்காகவும் லாகவமாகப் பயன்படுத்திக்கொள்வது போன்றவற்றில் அவர் […]