லைலா

கதைகள்

– ஷோபாசக்தி இந்தக் கதையை படித்துக்கொண்டிருக்கும் போது எந்த இடத்திலாவது நீங்கள் ஒரு புன்னகையைச் செய்தால் இந்தக் கதைசொல்லியின் ஆன்மா வக்கிரத்தால் நிறைந்துள்ளதாக அர்த்தம். அல்லது புன்னகை செய்த உங்களது ஆன்மா அவ்வாறு சிதைந்து போயிருக்கலாம். ஒருவேளை நம்மிருவரது ஆன்மாக்களுமே வக்கரித்துப் போயிருக்கவும் கூடும். பிரான்ஸின் தற்போதைய அதிபர்   நிக்கோலா சார்க்கோஸி நான்கு வருடங்களிற்கு முன்பு தனது தேர்தல் பிரச்சார உரையின்போது பாரிஸின் புறநகர்ப் பகுதியான ‘ஸெயின் துறுவா மூலி’ன்  பெயரைக் குறிப்பிட்டு, தான் பதவிக்கு வந்தால் […]

டிசே தமிழனின் கேள்விகள்

கட்டுரைகள்

டிசே தமிழன்  Facebook ஊடாக ஆறு கேள்விகளை முன்வைத்து  என்னைப் பதிலளிக்குமாறு கேட்டிருக்கிறார். வெறுமனே கலைச்சொற்களால் கோர்க்கப்பட்ட போலி அறிவுஜீவித்தனமான சத்தற்ற கேள்விகள் அவை. அந்தக் கேள்விகளின் பின்னாலிருப்பது மலிவான குதர்க்கவாதமே என நான் கருதுகிறேன். எனினும் “கேட்கப்படாத கேள்விகள் மட்டுமே முட்டாள்தனமானவை” என்று கூறிய மல்கம் எக்ஸின் மீது பாரத்தைப் போட்டுவிட்டுப் பதில்களைச் சொல்லலாமென்றாலும் இவையொன்றும் ஏற்கனவே கேட்கப்படாத கேள்விகளும் அல்ல. ஏற்கனவே வெவ்வேறு தளங்களில் பதில் சொல்லித் தீர்க்கப்பட்ட தேய்ந்துபோன கேள்விகளே இவை. எனினும் […]

எனது புதிய தொகுப்புகள்

அறிவித்தல்கள்

வ.ஐ.ச. ஜெயபாலன், புஸ்பராணி, தீபச்செல்வன், மாலதி மைத்ரி, ம. நவீன், அ.தேவதாசன், லெ.முருகபூபதி ஆகிய ஏழு ஆளுமைகளை நான் நேர்காணல் செய்து ‘லும்பினி’, ‘சத்தியக் கடதாசி’, ‘எதுவரை’ஆகியவற்றில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பு: தீராநதி, அம்ருதா, எதுவரை, புதுவிசை, மாத்யமம், ஆனந்த விகடன்,  புத்தகம் பேசுது, புதிய கோடாங்கி,  குமுதம், இனிய உதயம் ஆகிய இதழ்களிற்கு கடந்த பத்தாண்டுகளில் நான் வழங்கிய நேர்காணல்களின் தொகுப்பு: பிரதிகளிற்கு: கருப்புப் பிரதிகள் பேச: 00 91 9444272500 மின்னஞ்சல்: [email protected]

கையொப்பத்தை நீக்கிவிடுமாறு கோருகிறேன்

கடிதங்கள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்க்கிறோம் என்கிற அறிக்கை தொடர்பான கையொப்ப பட்டியலில் இருந்து எனக்கு கையொப்பத்தை நீக்கிவிடுமாறு கோருகிறேன். அதன் அர்த்தம் எனது அனுமதி இல்லாமல் என்னுடைய பெயர் இணைக்கப் பட்டுள்ளது என்பதல்ல. என்னிடம் பேசி அனுமதி பெற்றுத்தான் சோபாசக்தி என்னுடைய கையொப்பத்தை இணைத்தார். இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மெல்ல மெல்ல உயிர்க்கவும் சுதந்திரமான கலை இலக்கிய மாநாடுகள் நடத்தவும் உரிமை¨ உள்லவர்கள். ஆனால் அத்தகைய மாநாடுகளின் அரசியல் […]

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்கிறோம்!

கட்டுரைகள்

இலங்கை மற்றும் புகலிடத்தில் வாழும் சமூக அக்கறையாளர்களான நாங்கள் எதிர்வரும் சனவரியில் இலங்கையில் நடக்கவிருக்கும் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்று இந்த அறிக்கையின் கீழே கையொப்பமிட்டுள்ளோம். கடந்த முப்பது வருடகால யுத்தத்தால் உறவுகள் சீர்குலைந்து போயிருக்கும் தமிழ் – முஸ்லிம் – மலையக -சிங்கள எழுத்தாளர்களிடையே ஒரு பகைமறுப்புக் காலத்தைத் தோற்றுவிக்கவும் இலங்கையில் தமிழ்மொழி இலக்கியத்தைச் செழுமைப்படுத்துவதற்கான ஓர் எத்தனமாகவும் பல்வேறு கருத்து – அரசியல் நிலைப்பாடுகளிலிருக்கும் எழுத்தாளர்களிடயே ஓர் ஆரோக்கியமான உரையாடலை ஏற்படுத்திக்கொடுக்கும் களமாகவும் நாங்கள் இந்த […]