நூல் அறிமுகம்

கட்டுரைகள்

-சுகன் கம்யூனிஸ இயக்க வளர்ச்சியில் தமிழ்ப்பெண்கள் வீ.சின்னத்தம்பி வெளியீடு:ஐரோப்பிய கீழைத்தேய தொடர்பு மையம். முற்குறிப்பு: எனது ஊரவரான நூலாசிரியர் வீ.சின்னத்தம்பி அவர்களை 1984இன் இறுதிப் பகுதியில் கடைசியாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குப் பின்புறத்தே உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். “வெள்ளைப் பூனையானாலென்ன கறுத்தப் பூனையானாலென்ன எலி பிடித்தாற் சரி” என்ற டெங் சியாவோ பிங்கின் புகழ்பூத்த பொன்மொழிக்கு அவரிடம் என்ன விளக்கம் எனப் பாடம் கேட்க நானும் ஒரு தோழரும் போயிருந்தோம். இதோ! இதில் இருக்கும் செத்த […]

நூல் விமர்சன அரங்கு – ஒலி வடிவம்

கட்டுரைகள்

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியுடன் இணைந்து இலங்கை ஜனநாயக ஒன்றியம் (லண்டன்) நடாத்திய நூல் விமர்சன அரங்கு – ஒலிவடிவம். தலைமை – ச.வேலு விமர்சகர்கள் – கே. தங்கவடிவேல்,மு. நித்தியானந்தன்,ந. சரவணன்,அ. தேவதாஸ் நாள் –  06 டிசம்பர் 2008 பகுதி -1 http://media.imeem.com/m/oiGtOGq-ga/aus=false/ பகுதி – 2 http://media.imeem.com/m/0Fpj8_jf42/aus=false/ பகுதி – 3 http://media.imeem.com/m/vE4O-Y-461/aus=false/

வேட்டையாடுதலும் வேசம்போடுதலும்

கட்டுரைகள்

-சுகன் மார்க்ஸியத்தின் எதிரிகள் மார்க்ஸியத்துட்புகுந்து அதை நீர்த்துப்போகச்செய்யவும் அதன் சாரத்தை அதிலிருந்து பிய்த்தெறியவும் முயல்வது இப்போது புதிதாகத் தொடங்கிய ஒன்றல்ல. மார்க்ஸியம் எப்போதுமே அதனது உள்ளும் புறமுமான எதிரிகளின் சவால்களுக்கு முகங்கொடுத்து வந்திருக்கிறது. விமர்சனங்களிற்கு முகங்கொடுக்கவும் கால தேச வர்த்தமானங்களிற்கேற்பத் தன்னை அடையாளப்படுத்தவும் தனது போராட்டப்பாதையைத் தேர்ந்துகொள்ளவும் மக்களையும் மக்களின் எதிரிகளையும் இனங்கண்டு மக்களிலிருந்து கற்றுக்கொண்டும் கற்றுக்கொடுத்தும் வருகிறது. பாரில் கடையர், சமூகத்தில் ஒதுக்கப்பட்டோர் என தனது அடித்தளத்தில் நின்று அது ஒட்டுமொத்த மானுட மேன்மைக்காக இயங்குகிறது. […]

தேசம், அரசத்துவம், முதலீட்டியம்

ராஜன் குறை

-ராஜன் குறை தேசம், தேசீயம் குறித்த விவாதங்கள் தமிழில் மீண்டும் நிகழத்துவங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அவதூறுகளும், பதட்டங்களும் வழக்கம்போலவே கருத்துப்பரிமாற்றத்தின் கழுத்தை நெறித்தாலும் அறிவுத்தாகம் மிகுந்த வாசகர்கள் நீரையும் விஷத்தையும் நீக்கி பாலை மட்டும் அருந்துவார்கள் என்று அசட்டுத்தனமாகக் கூட நம்ப விரும்புகிறேன். என் பங்குக்கு சில இரவல் கருத்துக்களை பதிக்க விரும்புகிறேன். நான் தத்துவ அடிப்படையில் சுயம் என்பதை நம்புவதில்லையாதலால், கோபால் ராஜாராம் திண்ணை கட்டுரையில் (ஜனவரி 15,2009: http://www.thinnai.com/?module=displaystory &story_id=20901157&format=html) வலியுறுத்தியுள்ள சுயசிந்தனையில் சுயத்தை நீக்கிய […]

பின்நவீனத்துவ நாடோடிகள் III

கட்டுரைகள்

                  மற்றுமொரு நாளில் வடகிழக்கில் தென்கிழக்கில் மேற்கில் மூன்றுமுறை பல்லிசொல்ல உறவினர்கள் மரணம் எனவுரைக்கும் வருட பஞ்சாங்கம் வந்துபோனது   தொடுவானம் தெரியாத அடைத்த இருளில் திசையும் தெரியவில்லை துக்க வரவுரைக்கும் காகமும் இங்கில்லை மயில் வெள்ளையாடை தாமரைப்பூ நீரோற்பலம் கனவினிற்காண   புதிய பஞ்சாங்கம் வாங்கியாயிற்று கனவுவர மறுக்கிறது (தாயகம்)   1:உங்களுக்கு சுவிஸோ பரிஸோ பிடிச்சிருக்கு!: அது சொர்க்கமெல்லோ!  2:நீ கனோன் ரியாட்சியை நம்பாதே!அவள் உனக்கு விசா எடுத்துத் தரமாட்டாள்!அவள் உப்பிடி நிறைய சிறீலங்கனைச் சுத்தியிருக்கிறாள்!