முன்னொரு காலத்தில் ‘பொங்கல்’ இருந்தது

கட்டுரைகள்

-ஷோபாசக்தி முற்றுகைக்குள் சிக்கியிருந்த கிளிநொச்சி ஜனவரி 2ம் தேதி இலங்கை இராணுவத்திடம் வீழ்ந்தது. அதே நாளில் கொழும்பில் வான்படைத் தலைமையகம் முன்பாக மனித வெடிகுண்டு வெடித்தது. அன்று முழுவதும் தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம் என்று மண்டையைப் போட்டுப் பிய்த்துக்கொண்டிருந்துவிட்டு அதிகாலையில் தூங்கச் சென்று ஒருகண் மூடியபோது ‘த சண்டே இந்தியன்’ பத்திரிகையிலிருந்து போன் செய்து ‘பொங்கல் குறித்து ஒரு கட்டுரை எழுத முடியுமா’ எனக் கேட்டார்கள். பொங்கல் வரப்போவது அப்போதுதான் என் ஞாபகத்திற்கு வந்தது. போருக்கு முந்தைய […]

இருட்டு

தோழமைப் பிரதிகள்

-தர்மினி கடிகாரம் பழுதடையவில்லை ஆயினும் முட்கள் நகரவில்லை நித்திரை நித்திரை……. தொலைபேசி ஒலிக்காத நித்திரை. ஆயுதங்கள் அத்தனையும் பெரும் எரிமலை வாயில் குவிக்கப்பட்டு சமைக்கப்படுகின்றன. அவை உருகிக் குழம்பாகி வழிகின்றன. திடீரென, ஆறாக மாறிப்பாய்ந்தோடுகிறது. “வரட்சியில்லை” “வறுமையில்லை” “பசியில்லை” இந்தக் கூவல்கள் மட்டுமே கேட்கின்றன. சித்திரவதைச்சாலைகள் சிறைக்கூடங்களின் பூட்டுக்கள் பஞ்சு போலப் பறக்கின்றன. தவறுமில்லைத் தீர்ப்புமில்லை, தண்டனைதரக் கொம்பு வைத்தவன் எங்குமில்லை. ஆகா! பெருஞ் சிரிப்போடு படுக்கையிலிருந்து உருண்டு விழுந்தேன் பார்த்துச் சிரித்தது இருட்டு.

குண்டு டயானா

கதைகள்

“இறந்துபோன குழந்தையை அந்தப் பாலைமரத்தடியில் விதைத்து வந்தேன் இரவெல்லாம் பாலைமரம் தீனமாய் அழுகிறது.” -தமிழ்நதி ஈவ் தானியல் என்ற அந்தப் பிரஞ்சு நீதிபதி செல்வி. டயானாவின் மரணச் சான்றிதழை வரிவரியாகப் படித்து முடித்துவிட்டுச் சான்றிதழின் தலையில் பொறித்திருந்த சிங்க இலச்சினையை விரல்களால் வருடிப் பார்த்தான். பின்பு அந்த மரணச் சான்றிதழைத் தூக்கிப் பிடித்து ஒரு ‘லேசர்’ பார்வை பார்த்தான். சான்றிதழோடு விளையாடிக்கொண்டிருக்கும் நீதிபதியின் முகத்தைச் சலனமேயில்லாமல் அகதி வழக்காளி தே. பிரதீபன் பார்த்துக்கொண்டிருந்தான். மரணச் சான்றிதழை ஓரமாக […]

வெள்ளாளர்க்கு நாத்திகமும் தலித்துகளிற்கு ?

கட்டுரைகள்

-சுகன் கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது அவ்வையார் வாக்கு. அது அனேகமாக வெள்ளாளர்களுக்குத்தான் சொல்லப்பட்டிருக்க வேண்டும். யாழ்ப்பாண சமூக அமைப்பில் மட்டுமல்ல,தமிழ்ச்சமூக அமைப்பிலும் அதிகார அமைப்பிலும் கோவில்களின் இடம் திட்டவட்டமாகவே அசைக்கமுடியாதவாறு வெள்ளாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது எனச்சொன்னால் அதை இறந்த காலமாகக் கருதி உலாந்தாக்காறர்களின் தோம்புப் பதிவுகளைத்தேடி நாம் ஆய்விற்குப் போகவேண்டியதில்லை.தீண்டத்தகாதவர்கள் உட்பிரவேசிக்கக்கூடாது என்பது ஆறுமுக நாவலர் வகுத்த சமய நெறி,சைவநெறி,வாழ்க்கை முறை. நிர்மலா அக்கா தேசிய உருவாக்கத்தில் கிரேக்க தொன்மக் கடவுளை உதாரணப்படுத்தி அக்கடவுளிற்கு […]

தலைகீழ்: ஒரு பார்வை

கட்டுரைகள்

‘இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘தலைகீழ்’ எனும் தந்தை பெரியாரின் 35ஆவது நினைவேந்தல் 28-12-2008 ல் பாரிஸில் நடைபெற்றது. நிகழ்வு பி.பகல் 2மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவித்திருந்தபோதும் ‘வழமைபோல’ தாமதித்தே நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொள்ளவென லண்டன், நோர்வே போன்ற நாடுகளிலிருந்தும் தோழர்கள் வந்திருந்தனர். தோழியர். விஜி தலைமை வகித்து நிகழ்வை நெறிப்படுத்தினார். அவர் தனது தலைமையுரையில் “பெரியாரை நினைவு கூர்வதும் பெரியாரியல் குறித்த ஆய்வுகளும் புகலிடத்தில் இது வரை நடைபெறாத நிகழ்வுகளாகும். […]

நூல் அறிமுகம்

கட்டுரைகள்

ஈழம்: இன்றெமக்கு வேண்டியது சமாதானமே ஷோபாசக்தி: அ.மார்க்ஸ் வெளியீடு: பயணி இலங்கை இராணுவம் கிளிநொச்சி எல்லைக்குள் காலடி எடுத்து வைத்து சுமார் 4 மாதங்களாகப் போகின்றன. பன்னாட்டு அரசு சாரா அமைப்புக்கள், ஐ.நா. நிறுவனங்கள் எல்லாம் போர்ப் பகுதியிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டும் கிட்டத்தட்ட நான்கு மாதங்களாகப் போகின்றன. வேறெப்போதுமில்லாத அளவிற்குப் புதிய புதிய விதிகளை இயற்றி இலங்கை ஊடகங்கள் கடும் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரம் படுமோசமாகச் சீரழிந்துள்ளது எனச் சென்றமாதம் இங்கு வந்து போன […]