-சுகன் உன் இன்னுயிரை ஈந்தது போதும் லோகிதாசா எழுந்திரு! செய்திகளைச் செவிமடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி எனக்கூறி விடைபெறுகிறார் அறிவிப்பாளர் லோகிதாசா எழுந்திரு! நாடகம் முடிந்தபின் உன்னை வழமைபோல் கூட்டிப்போக அப்பா வந்திருக்கிறார் லோகிதாசா எழுந்திரு! கண்டியரசனில் உன் மாமா உன்னை உரலில் போட்டு இடிக்க அம்மா பார்த்திருந்து அழுகிறாள் அரிச்சந்திர நாடகத்திலோ நீ பாம்புதீண்டி இறக்கிறாய் எழுந்திருக்கமாட்டாமல் நீள்துயில் கொள்கிறாய் இப்போது இடையில் திரைமூடி அடுத்த காட்சி தொடங்கலாம் நாடகத்தில்! லோகிதாசா எழுந்திரு! நீ போராளியல்ல […]
எதுவரை
பின்நவீனத்துவ நாடோடிகள் II
குமரன்: வட்டுக்கோட்டை, கன்னியாகுமரி, சூரிச், கொழும்பு, வட்டுக்கோட்டை, கொழும்பு, பரிஸ். தற்காலிக முகவரி: கார்ஜ் லெ கொனேஸ் “நீ விசா இல்லாமை ஜேர்மனில இருக்கிறாயெண்டெல்லோ கேள்விப்பட்டன்” “இல்லை மாமா நான் உள்ளுக்கை இருந்தனான்” “கேஸ் ஆர் எழுதினது?” “கேஸ் நல்ல கேஸ், நான் தான் சொதப்பிவிட்டன், ‘உதயன்’ பேப்பரிலை வேலை செய்தனானெண்டு குடுத்தது, அவன் உதயன் பேப்பரின்ரை சின்னம் என்னண்டு கேட்டான்,எனக்குத் தெரியயில்லை! “நீ புலனாய்வுப் பிரிவிலையெல்லோ வேலை செய்தனி” “அது தம்பி மாமா!” “இடையுக்கை உனக்கு […]
அறிவிப்பு:
‘தலைகீழ்’ தந்தை பெரியாரின் 35வது நினைவேந்தல் நாள்: ஞாயிறு 28 டிசம்பர் பி.ப. 2 மணியிலிருந்து 8 மணிவரை. இடம்: Salle De Recontre,Rue Jean francois, 95140 Garges Les Gonesse வழித்தடம்: RER D, Garges Sarcelles – Bus: 133 “ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் […]
கவிதை: சுகன்
அதியற்புதமான ஓவியமொன்றை என்னை முன்னிலைப்படுத்தி எதிரி வரைகின்றான் வேகமாய் ஓடி இளைத்து மூச்சுவாங்கி நின்று நிதானித்து நடந்து களைத்து ஊர்ந்து முடியாது இயக்கமிழந்து வீழ்ந்து கிடக்கையில் எதிரி வந்து ஆதரவோடு பற்றுகிறான் எனது தஞ்சக்கேட்டை அவன் எப்போதுமே சுட்டிக்காட்டியவனல்ல என்னோடு அவன் எப்போதும் பேசியதுமில்லை நாம் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததுமில்லை நாம் ஒருவருக்கொருவர் கண்ணிற்குத் தெரியாத எதிரிகளுமல்லர் ஒரு துரும்பாகக்கூட மதிக்காத அவன் கைகளைத் தட்டிவிடுகிறேன் இம்மியளவும் பிசகாது இவ்விடத்திற்தான் நான் வீழ்ந்துகிடப்பேன் இவ்விடத்திற்குத்தான் நான் […]
முதலாண்டு நினைவஞ்சலி
மூத்த தொழிற்சங்கவாதியும் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தின் தூண்களில் ஒருவரும் எழுத்தாளரும் விமர்சகரும் மறுத்தோடியுமான தோழர் குமாரசாமி பரராசசிங்கம் 16.12.1935 – 16.12 .2007 மாலை நேர வெள்ளி முகில்கள் பொன்னாய் எரிந்து அவிந்து அடங்கி மேலை வானம் மெலிதாய்ச் சிவக்கும் கிழக்கின் மலையிலும் செம்மை தெறிக்கும் சாயும் சூரியன் மெல்ல இறங்கும் சாகும் சூரியன் சிவந்து விரிந்து சாவிற் கூட அழகுடன் மிளிரும் மூளிவானம் மேலும் சிவந்து மூன்று நாழிகைக் கிரவை மறுக்கும் வானில் மெல்லவொரு வெள்ளியும் […]
ஈழத்தின் அவலமும் தமிழகத்தின் குரல்களும்
– ஷோபாசக்தி (ஈழப் பிரச்சினையின் இன்றைய நிலை குறித்து, இம்மாத இறுதியில் தமிழகத்தில் வெளிவரவிருக்கும் தொகுப்பு நூலுக்காக எழுதப்பட்ட கட்டுரை.) சிறிலங்காப் பேரினவாத அரசால் இன்று தமிழ்மக்கள் மீது உச்சக்கட்டத்தில் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இராணுவத் தாக்குதல்களிற்கு எதிராகவும், சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக இரத்தமும் கண்ணீரும் சிந்திக்கொண்டிருக்கும் தமிழ் மக்களிற்கு பரிவும், ஆதரவும் காட்டும் முகமாகவும் கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எழுச்சிகளையும் நிகழ்வுகளையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். மறுபுறத்தில் மகிந்த ராஜபக்ச அரசின் அப்பட்டமான இனவாத அணுகுமுறையையும், மனிதவுரிமை […]