நான் சாத்தியமற்றதையே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்

நேர்காணல்கள்

‘எதுவரை?’ மே – ஜுன் 2010 இதழில் வெளியாகிய  ஷோபாசக்தியின் நேர்காணல். நேர்கண்டவர்: எம். பெளஸர். ‘எதுவரை?’ இதழைப் பெற்றுக்கொள்ள: [email protected] – அழைக்க: 07912324334 (U.K) 0773112601 (இலங்கை) 9443066449 (இந்தியா). என்னுடனான உரையாடலின் போது வாசிப்பு மீதான உங்களது தீராத ஆவலை வெளிப்படுத்தியதுடன் இலக்கியப் பிரதியை எழுதுவது என்பது உங்களுக்கு சலிப்பூட்டக் கூடிய வேலை என்றும் சொல்லியுள்ளீர்கள். ஆனால் சர்ச்சைக்குரிய பல்வேறு விவாதங்களில் மிக ஆர்வத்துடன் நீங்கள் இறங்குவதிலும் கருத்துப் போர்களை நடத்துவதிலும் சளைக்காமல் […]

இனப்படுகொலை ஆவணம்

கட்டுரைகள்

– ஷோபாசக்தி 1977ம் வருடம் ஓகஸ்ட் மாதம் 16ம் தேதி இலங்கை முழுவதும் தமிழர்கள் மீதான இனப்படுகொலை திட்டமிட்டவகையில் இலங்கை அரசபடையினராலும் சிங்கள இனவெறியர்களாலும் தொடக்கப்பட்டபோது எனக்குப் பத்து வயது. எங்களது கிராமத்திலிருந்து பலர் கொழும்புக்கும் சிங்கள நாட்டுப் பக்கங்களுக்கும் சென்று அங்கே கூலித் தொழிலாளர்களாகவும் கடைச் சிப்பந்திகளாகவும்  வேலை செய்துகொண்டிருந்தார்கள். எங்களது கிராமமே அப்போது இழவுக்கோலம் கொண்டிருந்தது. தங்களது கணவன்மார்களையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் நினைத்துப் பெண்கள் நாள் முழுவதும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள் வானொலியில் செய்திகளை விடாமல் […]

லும்பினி: புதிய இணையத்தளம்

அறிவித்தல்கள்

அ.மார்க்ஸ், ராஜன் குறை, ரமேஷ் பிரேதன், ஹெச்.ஜி.ரசூல், பொதிகைச் சித்தர், கவுதம் நவ்லக்கா, சேனன், லீனா மணிமேகலை, கொற்றவை, ரணஜித் குஹா, யவனிகா சிறீராம், கு. உமாதேவி, த.அகிலன், இளங்கோ கிருஷ்ணன், தர்மினி, கவின் மலர், அசாதி, ஸ்நேகிதன், இசை, ஷோபாசக்தி ஆகியோரின் எழுத்துகளுடன்… www.lumpini.in

உன் கேள்விக்கு காவாலித்தனம் என்று பெயர் வை!

கட்டுரைகள்

– ஷோபாசக்தி அனைத்து சமூக வெளிகளிலுமிருந்தும் ஒதுக்கிவைக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொரு வெளிகளாக அத்துமீறி நுழையும்போது அவர்கள் ஆண்முதன்மைச் சமூகத்தால் கொடூரமாக ஒடுக்கப்படுகிறார்கள். மீறல்களைச் செய்த பெண்களின் மீது ஒழுக்கமின்மை, ஓடுகாலி, பரத்தை போன்ற வசைகளைச் சுமத்தி அவற்றையே பெண்கள் மீதான முதன்மை ஆயுதங்களாகச் சுழற்றிவிடுவதே ஆண்முதன்மைச் சமூகத்தின் காலாதிகாலத்திற்குமான யுத்த தந்திரமாயுள்ளது. இலக்கியவெளியும் இதனிலிருந்து தப்பித்துவிடவில்லை. பெண் எழுத்துகளின் உச்சமாக நூற்றாண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தால் துதிக்கப்பட்டுக்கொண்டிருந்த ஆண்டாளின் கவித்துவத்திற்குத் தொடர்ச்சியே இல்லாமல் ஆண்டாள் தெய்வப்பிறப்பாகவும் தொன்மமாகவும் நிறுவப்பட்டிருந்த […]

என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை*

அறிவித்தல்கள்

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல்இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன்சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்‘ கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு ‘இந்துமக்கள் கட்சி‘ சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதை எளிமைப்படுத்தி பார்த்துவிட […]