காலம் தேவையில்லை எங்கே என்பதும் தேவையில்லை யாரென்பதும் தேவையில்லை எப்படியென்பதைக் கேளுங்கள் வீட்டிற்கு வந்தார்கள் “அவரிற்கு நாங்கள் மரணதண்டனை விதித்துள்ளோம்” என் மனைவியிடம் சொன்னார்கள் “எங்களிடம் தோட்டாக்கள் இல்லை தோட்டாக்கள் வாங்குவதற்குப் பணம் அதிகம் நாங்கள் அவரைத் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப் போகின்றோம்” என்றார்கள்; மேலும். ஊரவர்கள் ஒரு தோட்டாவுக்கு எண்பது ரூபாய் வீதம் மூன்று தோட்டாவுக்காக இருநூற்றி நாற்பது ரூபாயைச் சேர்த்து அவர்களிடம் கொடுத்தார்கள். சுகன் நன்றி – காலம்
நேர்காணல் : ஷோபாசக்தி
மெளனம் என்பது சாவுக்குச் சமம் (‘மாத்யமம்’ மலையாள வார இதழில் 2005 மார்ச்25 ல் வெளியாகிய நேர்காணலின் தமிழ் வடிவம் ) நேர்கண்டவர் – T.T.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் ஈழத்தமிழ் இலக்கியத்தின் இடம் என்ன? ஆம்! அப்படியொரு காலம் இருந்தது. தமிழ் உரை நடையில் ஆறுமுகநாவலர் தொடக்கம் இலக்கிய விமர்சனத்தில் பேராசிரியர்கள் கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்களும் புனைகதையில் எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம் போன்றவர்களும் தலித் இலக்கியத்தில் கே.டானியலும் கவிதையில் பிரேமிளும் குறிப்பிடத் தகுந்த ஆளுமைகளாக இருந்ததோடு மட்டுமல்லாமல், […]
விலங்குப் பண்ணை
ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்திரெண்டாம் ஆண்டு நான் ஏழாவது வகுப்பில் பாஸாகி எட்டாம் வகுப்புக்குச் சென்றேன். சென்ற ஆண்டு இறுதிப் பரீட்சையில் சித்தியடையாத பழைய எட்டாவது வகுப்பு மாணவன் ஒருவன் இப்பொழுது எங்களுடன் மறுபடியும் எட்டாம் வகுப்பில் படிக்கத் தொடங்கினான். எங்கள் இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன. இருவரும் அதிக தலைமுடியுடன் காணப்பட்டோம். இருவரும் சீத்தைத் துணியில் தைக்கப்பட்ட பூப்போட்ட சட்டைகளும் ப்ளுரில் துணியில் காற்சட்டைகளும் அணிந்திருந்தோம். இருவருமே வேதக்காரர்கள். அதாவது A B C D எனப் […]
தமிழ்த் தேசியமும் சே குவேரா பெனியனும்
திரைப்பட நடிகர்களின் கட் அவுட்டுக்களுக்குப் பாலபிஷேகம் செய்வது, அபிமான நடிகைகளுக்காகக் கோயில் கட்டுவது, அபிமான நடிகர்களுக்காக விரலை வெட்டுவது, அரைவேக்காட்டுத்தனமான மிகை உணர்ச்சித் திரைப்படங்களுக்கும் மலிவுத்தனமாக பாலியல் கிளர்ச்சிகளை உருவாக்கும் விடலைத்தனமான ‘காதல்’ படங்களுக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கும் திரைப்பட ஆய்வாளர்களும் பாராட்டுக் கட்டுரைகள் எழுதுவது, உலக இலக்கியத்தைச் சவால் செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் இலக்கிய எழுத்தாளன் பேய், பிசாசு நம்பிக்கைகளையும் சாதி பெருமிதங்களையும் தூக்கி நிறுத்தும், துப்பட்டாக்களைக் கண்காணிக்கும் சமூக விரோதத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது, திரைப்படப் […]
தமிழ்
நன்றி – அநிச்ச நவம்பர் 2005 வேசியின் விரிந்த கூந்தல் அவளின் முதுகின் கீழாகப் பரவிப் போய் அவளின் குண்டியைத் தொட்டது. வேசி அந்தக் கரிய கூந்தல் விரிப்பில் கால்களை விரித்து மல்லாந்து கிடந்தாள். அவளின் கண்கள் புருவங்களுக்குள் சொருகிக் கிடந்தன. அவள் நெற்றியில் இலந்தைப் பழங்களை ஒட்டி வைத்தது போல இடப்புறத்தில் ஒன்றுமாக வலப்புறத்தில் ஒன்றுமாக இரண்டு துளைகள் இருந்தன.பின்னிரவில் பெய்த மழையில் அந்தச் சவம் செம்மையாய் நனைந்திருந்தது. சவத்தின் அசாதாரணமான நீண்ட கைகளையும் வயிற்றையும் […]