காணவில்லை!

அறிவித்தல்கள்

பிரித்தானியாவில் Watford நகரத்தில் 108, Liar Road என்ற முகவரியில் வசித்து வந்த படத்திலிருக்கும் யமுனா ராஜேந்திரனைக் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் காணவில்லை. மார்ச் மாதம் 11ம் தேதி ‘தேசம்’ இணையத்தளத்தில் “ஷோபா சக்திக்கும் சுகனுக்கும் பத்து நாளில் பதிலோடு வருகிறேன்” என்று சூளுரைத்துவிட்டுச் சென்றவரை நாற்பது நாட்களாகியும் காணவில்லை. கடைசியாக இவர் நடிகர் ரகுவரனின் செத்தவீட்டில் கண்ணைக் கசக்கிக்கொண்டு திரிந்ததாகவும் தகவல்கள் உள்ளன. இவர் ஒளிந்திருக்கும் இடமோ அல்லது இவர் பற்றிய தகவல்களோ தெரிந்தவர்கள் […]

இந்தா கிடக்கு மேளம்!

கட்டுரைகள்

நூல் விமர்சனம்: சுகன் “சாதியப் போராட்டம் சில குறிப்புகள்: சி.கா. செந்தில்வேல் உடன் நேர்காணல்”. -த.ஜெயபாலன் ‘தேசம்’ வெளியீடு, பக்கங்கள்: 40 “நான் பிறந்தது வண்ணார் சமூகத்தில்” என்று அய்ம்பது ஆண்டுகளைக் கண்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியொன்றின் தலைவர் கூறுவதிலிருந்து தொடங்குகிறது இச் சிறு கைநூல். சிங்கள பவுத்த சமூகத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த ஆர். பிரேமதாஸ நாட்டின் அதிபராய் வரமுடியும். தமிழ் இந்து சமூகத்தில் ‘ஒரு வண்ணான்’ தமிழ் அரசியற் கட்சியினது தலைவராக வர […]

வெள்ளிக்கிழமை

கதைகள்

சிறுகதை: ஷோபாசக்தி ‘லுரெஸ்ரா’ தியேட்டரில் நடக்கவிருக்கும் ‘அன்னா கரீனினா’ நாடகத்துக்குத் தோழர். சாம்ஸனுடன் சேர்ந்து போவதற்காக நான் ‘லா சப்பல்’ மெத்ரோ நிலையத்துக்குள் தோழர். சாம்ஸனுக்காக நீண்ட நேரமாகக் காத்திருந்தேன். இப்பொழுது நேரம் மாலை 4. 40. இன்னும் இருபது நிமிடங்களில் நாடகம் தொடங்கிவிடும். இனி சாம்ஸன் வந்தாலும் இங்கிருந்து அடுத்த மெத்ரோ பிடித்து நாடக அரங்கிற்குப் போவதற்கிடையில் நாடகம் தொடங்கிவிடும். நாடகம் தொடங்கியதற்குப் பின்பு உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். இந்த வெள்ளிக்கிழமை விட்டால் இனி அடுத்த வெள்ளிக் […]

பாப்லோ நெரூதா: ஒரு நூற்றாண்டுத் துரோகம்

கட்டுரைகள்

-பொடிச்சி உயிர்மை (பிப்ரவரி 2005) ‘பாப்லோ நெருதாவின் துரோகம்’ என்கிற கட்டுரையில் யமுனா ராஜேந்திரன் எழுதுகிறார்: “பாப்லோ நெருதா நூற்றாண்டின் போது நெருதாவின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், அனைத்துவகையான மார்க்சியர்களின் மீதும் காலம் காலமாக வைக்கப்பட்டு வரும் இருநிலை விமர்சனங்கள்தான். முதல் விமர்சனம் நெருதா பல பெண்களோடு உறவு கொண்டு பிற்பாடு அவர்களை நிராகரித்தார், அவர்களுக்குத் துரோகம் செய்தார் என்பதும், பாலியல் ரீதியில் அவர் பல பெண்களக் கடாசினார், என்பதாகவும் இருக்கிறது. … பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு கார்ல் […]

இரண்டாம் வருட நினைவஞ்சலி

அறிவித்தல்கள் கட்டுரைகள்

தமிழ் இளைஞர் பேரவையின் முதலாவது தலைவரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (T.L.O) நிறுவனர்களில் ஒருவரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஃப்ரான்ஸ் பிரதிநிதியாக இயங்கியவரும், மக்கள் கலை இலக்கியவாதியுமான தோழர். சி.புஸ்பராஜா (1951 – 2006) “நான் எந்த விடயத்திலும் மௌனியாக இருக்க விரும்பவில்லை. மௌனியாக இருக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. நான் இவர்களுடன்தான் பேசுவேன், இவர்களுடன்தான் உறவு கொள்வேன் என்ற இறுமாப்பும் என்னிடமில்லை. துப்பாக்கி இல்லாத யாருடனும் நான் எப்போதும் பேசத் தயாராக உள்ளேன். நான் […]