சாயும் காலம் – ஷோபாசக்தி

கட்டுரைகள்

கடந்த வருடம் இதே நாளில் தோழர் புஸ்பராஜாவின் உடல் வைக்கப்பட்டிருந்த காம்பறாவின் மூலைகளில் நாங்கள் மரத்துப்போய் நின்றிருந்தோம். அவரின் இருப்பைவிட அவரின் இறப்பு ஒருவருட காலத்திற்குள்ளாகவே அவரின் முக்கியத்துவத்தை எங்களுக்கு உணர்த்தி நிற்கின்றது. 1997ல் ‘இனியும் சூல் கொள்’ இலக்கிய சந்திப்பு மலர் தயாரிப்பு வேலைகள் லஷ்மி/கலைச்செல்வன் வீட்டில் நடந்துகொண்டிருந்தபோது அசோக் என்னை அங்கே அழைத்துச் சென்றிருந்தார். அங்கேதான் நான் புஸ்பராஜாவை முதலில் சந்தித்தேன். அதற்குச் சில நாட்களிற்குப் பின்பு பிரான்ஸில் நடந்த 23வது இலக்கியச் சந்திப்பிலிருந்து […]

வசந்தத்தின் இடிமுழக்கம்.

கட்டுரைகள்

ஊர்களில் திரிகின்ற நாய்களும் தடையின்றி உள்வந்து போகுதையே – கோவிலின் உள்வந்து போகுதையே – நாங்கள் உங்களைப் போலுள்ள மனிதர்களாச்சே உள்வந்தால் என்சொல்லையே – கோவிலின் உள்வந்தால் என்சொல்லையே –சுவாமி செம்மலை அண்ணலார் 1. அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தாறாம் வருடம்! ஒக்ரோபர் இருபத்தோராம் நாள்! பத்து நூற்றாண்டுகளாக எல்லா வகையான கீழைத்தேய மேலைத்தேய விடுதலைத் தத்துவங்களையும் தன் முன்னே மண்டியிட வைத்துத் தின்று செரித்துக் கழித்த கொடூர யாழ்ப்பாணத்துச் சாதியச் சமூகத்தை அசைப்பதற்காகச் சுன்னாகம் சந்தை […]

வடக்குக் கிழக்கும் தமிழர் தேசியமும்

கட்டுரைகள்

கிழக்கில் சிங்கள மக்களின் குடியேற்றத்தை எதிர்க்கும் தமிழ்த் தேசியர்கள் தென்னிலங்கையில் தமிழ் மக்களின் குடியேற்றத்தை எதிர்ப்பதில்லை என்பது அவர்களது இரட்டைவேட இனவாத அரசியல் நிலைப்பாடாகும –தமிழரசன் னிதர்களின் பரிணாம வளர்ச்சிக் கட்டத்திலே கிட்டத்தட்ட 200000 வருடங்களுக்கு முன்பாகவே மனிதர்கள் குடிபெயரத் தொடங்கி விட்டனர். நெருப்புக் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தமது ஆபிரிக்கத் தாய் நிலத்திலிருந்து ஏனைய இடங்களுக்குப் பரவத் தொடங்கினர். பழங்கால மனிதர்கள் இயற்கையைப் பின் தொடர்ந்து சென்றார்கள். ஆறுகள் குளங்கள் நீரோடைகள் கொண்ட நிலங்களையும் மந்தை […]

குற்றங்களால் எழுதியவை

கட்டுரைகள்

அவர்கள், மாவீரர்கள்xதுரோகிகள் என்று இருவகைகளில் மட்டுமே பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகத்திலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உரையாடத் துணியும் ஒருவர் இந்த இரு வகைகளில் ஒன்றிற்குள்தான் அடங்குவார். இந்த இருவகைகளுக்கும் அப்பாலும் எவராவது இருந்தால் அவர்களின் இருப்புக்கு அவர்களது சமூகத்தில் அர்த்தம் ஏதுமில்லை. மாவீரர்களின் வரலாறு ஈழப்போராட்டத்தின் வரலாறாயிருக்கிறது. துரோகிகளின் வரலாறு ஈழப்போராட்டத்தின் வரலாறாயிருக்கிறது. அவர்கள் ஒவ்வொரு நாளும் பனான்: அல்ஜீரிய வாழ்வும் விடுதலையும் என்ற புத்தகத்தின் 485வது பக்கத்தைச் சிரத்தையுடன் வாசிக்கிறார்கள்: எந்தவொரு நாட்டிற்கும் எந்தவொரு சமூகத்திற்கும் துரோகிகள் […]

முரண்வெளியை முன்வைத்து

கட்டுரைகள்

-சுகன் சாதி அடையாளத்தை இழப்பது எப்படித் தற்கொலைக்குச் சமமானதென்று ஹரிஹரஷர்மாவின் நான் ஒரு வெள்ளாளன்/ பிராமணன் கட்டுரை ஈட்டுறுதி காட்டிவிட்டுப் போயிருக்கிறது. தமிழ்ச்சமூகம் எப்படிச் சாதியச் சமூகமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்றும் ஜேர்மனிய நாசிகளின் இன அழிப்புப் பொறிமுறை யாழ்ப்பாண சாதி ஒடுக்குமுறையுடன் ஒப்புநோக்கும்போது காற் தூசிக்குச் சமமானதென்றும் சொல்லிச் செல்கிறது. ஒரு துயரத்தை இன்னொரு துயருடன் ஒப்பிட்டுச் ‘சீர்தூக்கிப் பார்ப்பது‘ சிக்கலானதுதானெனினும் இதைவிட வேறு எப்படிச் சாதியக் கொடூரத்தைச் சொல்லிவிடமுடியும்.அனுபவித்துப் பார்த்தாற்தான் அதன் அழற்சி தெரியும். சாதிய […]

சோதனை

தோழமைப் பிரதிகள்

பரன் “இதுக்கெல்லாம் பேமிற் தரேலாது.” மேலதிக அரசாங்க அதிபர் நாதன் சர்வசாதாரணமாகச் சொன்னார். “அப்படியெண்டால் நாங்கள் என்ன செய்யிறது. இதுவரைக்கும் அஞ்சு பிள்ளையளையும் மூண்டு ரீச்சர்மாரையும் கடிச்சுப்போட்டுது” அதிபர் நல்லையா கோபமாகப் பேசினார். “குரங்கு கடிக்குதெண்டால் உடனே அதைச் சுட வேண்டுமெண்டு யார் சொன்னது? அதைக் கலைக்கிறதுக்கு எத்தனை வழி இருக்கு!” ஏ.ஜீ.ஏ திருப்பிக் கெட்டார். “வேற வழி இல்லை. எத்தனை தரம் கலைச்சாச்சு என்ர அலுவலக பைல் எத்தனையக் கிழிச்சுப்போட்டுது. பள்ளிக்கூட மரங்களுக்குக் கீழ ஒரு […]