நான் ஓர் வெள்ளாளன்…….

கட்டுரைகள்

-ஹரிஹரஷர்மா– ன் பள்ளி வகுப்பில் கல்வி கற்க நான் அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை. எந்தப் பஞ்சமர்களுடனும் நான் சேர்ந்து விடக்கூடாதென்ற முன்னெச்சரிக்கையாலும், வேறு சில குடும்ப பொருளாதார சூழ்நிலைகளாலும் அம்மா என்னை அங்கு சேர்க்கவில்லை. பனங்கிழங்குகளை கிண்டியபடி வேர்க்க விறுவிறுக்க அவள் சொல்லித்தந்த ஆனா ஆவன்னா தான் எனது முன்பள்ளிப் பாடங்கள். அம்மாவிடம் தன்னைக் கைவிட்டுச் சென்ற அய்யனுக்கெதிராக (அப்பாவுக்கு) என்னை வளர்த்து ஓர் பிராமணனாக-பத்ததி (சமஸ்கிருதத்திலும் குருகுலக் கல்வியிலும் உயர்தகுதி பெற்ற பிரம்மஸ்றீ பிராமணர்கள் மாத்திரம் சொல்லக்கூடிய […]

சதாம் உசேன்

கட்டுரைகள்

(1937-2006) ஒரு மனிதனைத் தூக்கிலிட்டு அவன் துடித்துத் துடித்துச் சாகும் காட்சியைப் படம் எடுத்து ரசிக்கும் மனவிகாரம் கொண்டவர்கள் உலகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம்! -வ. அழகலிங்கம் பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் ஈராக்கை மார்ச் 2003ல் அடாத்தாக ஆக்கிரமித்து 665000 ஈராக்கிய மக்களைக் கொன்று குவித்த ஜோர்ச் புஷ்சின் அமெரிக்க ஏகாதிபத்திய நிர்வாகத்தால் கட்டளையிடப்பட்டு, ஈராக்கின் முன்னை நாள் ஆட்சித் தலைவர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டுள்ளார். ஈராக்கில் உள்ள துஜைல் நகரில் 1982ம் ஆண்டில் […]

தொடரும் துரோகம்

வ.அழகலிங்கம்

:தோட்டத் தொழிலாளர்களது வாழ்வாதாரப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்காத தமிழ்த் தேசியவாதிகள் -வ.அழகலிங்கம் இலங்கையில் அரசுடமையாக்கப்பட்ட பெருந்தோட்டங்களில் உழைக்கும் தொழிலாளர்களது தற்போதைய நாளாந்தச் சம்பளம் 195 ரூபாவாகும். அது மூன்று அமெரிக்க டொலர்களுக்கும் குறைவானதாகும். தோட்டத் தொழிலாளர்கள் 100 ரூபா சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தம் செய்தார்கள். கொம்பனி நிர்வாகங்களோ, உலகமே புரண்டு விழுந்தாலும் 250 ரூபாவுக்கு மேல் சம்பளத்தை உயர விடுவதில்லை என்று அடித்துக் கூறினார்கள். போராட்டம் வெடித்தது. 14 நாட்களாகப் போராட்டம் நீடித்தது. 14 நாட்கள் […]

மதுரக்குரல் மன்னன்…..

கட்டுரைகள்

சாலையிற் தார் உருகிச் செல்லும் நெருப்பு வெயிலில் யாழ்ப்பாணத்தின் சிறு நகரம் ஒன்றிற்குள்ளால் எங்களது வாகனம் சென்றுகொண்டிருந்தது. வாகனத்திற்குள் எனது சகாக்கள் முழு ஆயுதபாணிகளாகப் போர்க்கோலத்திற் தயாராயிருந்தார்கள். வாகனத்தின் தலையில் ஒலிபெருக்கிகள் இரண்டு கட்டப்பட்டிருந்தன. வாகனத்தின் பின்இருக்கையில் நான் அமர்ந்திருந்து ஒலிவாங்கியில் அறிவிப்புச் செய்துகொண்டிருந்தேன். காலையிலிருந்து நாங்கள் இந்த வாகனத்திற் சிறு நகரங்களையும் கிராமங்களையும் அங்குலம் அங்குலமாக அளந்தவாறே வந்துகொண்டிருக்கிறோம். அந்தச் சிறு நகரத்தில் எங்களது வாகனம் ஒரு நிமிடம் நின்று கிளம்பியபோது வாகனத்திற்குள் புதிதாக ஏறி […]

வடக்கிலிருந்து கிழக்குப் ……..

வ.அழகலிங்கம்

வடக்கிலிருந்து கிழக்குப் பிரிவதிலிருந்து தொடங்கி சர்வதேசியம் வரை -வ. அழகலிங்கம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி ஒரே நிர்வாக அலகாக இணைக்கப்பட்ட வடகீழ்மாகாணத்தை அண்மையில் இலங்கையின் உயர்நீதிமன்றம் சட்டவிரோதமென்று தீர்ப்பளித்துள்ளது. இதையிட்டு தமிழ் இனவாதிகள் கொதிப்படைந்துள்ளார்கள். 2004 வெருகல் நரபலியின்போது இந்தத் தீர்ப்பு நிகழ்ந்திருந்தால் யாழ் குடாநாட்டுப் பெருமை பிடித்த கனவான்களைக் கிழக்கு மக்கள் வாய் திறக்க விட்டிருக்கமாட்டார்கள். உலகயுத்தகாலத்தில் என்ன மாதிரி சிங்கப்பூரில் இந்தியத் துருப்புக்கள் பிரித்தானிய எஜமானர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்களோ, ஆபிரிக்கப் பிரெஞ்சுக் கொலனியான […]

மேடை: சுகன்

கட்டுரைகள்

சமூகப் படுகொலைக்கு எதிரான அஞ்சலி: உயர்திரு. சிவசுப்பிரமணியம் அவர்கள் நாங்கள் அழைக்கப்படவுமில்லை நாங்கள் மேடைக்குப் போகவுமில்லை உட்காருவதற்கு எங்களுக்கான இடங்கள் காட்டப்பட்டன ஆனால் அவர்கள் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள் எங்கள் துயரங்களைப் பற்றி எங்களுக்குச் சொல்கிறார்கள் எங்கள் துயரங்கள் எங்களுடையதாகவே இருந்தன அவை அவர்களுடையதாய் மாறவேயில்லை ………………………………………… …………………………………………….. ……………………………………………… –வகாரு சோனாவனே வெள்ளாளர்களுக்கு அரசியல் சமூக அதிகாரங்களையும், தலித்துக்களுக்கு பனையையும் காட்டிவிட்டுப் போகின்ற விற்பன்னர்கள் நிறைந்த காலமிது. தாழ்த்தப்பட்டோரின் எதிர்காலம் இருள், அப்பாலிற்கும் அப்பால் இருள். இருள் […]