அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல

கட்டுரைகள்

சமூகத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குகள், குழுக்கள் நிலவும்போது எதிர்க் கருத்துகள் அல்லது மாற்றுக் கருத்துகள் கொண்ட ஒருதரப்பைக் கருத்துப் பலமற்ற மற்றொரு தரப்பு அவதூறுகளால், ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளால் எதிர்கொள்வது எப்போதும் நடக்கும் ஒன்றுதான். இன்னொருபுறம் பரபரப்புச் செய்திகளை வெளியிடும் தாகத்தோடு அவதூறுகளைப் பிரசுரித்து மகிழும் போக்கும் சில ஊடகங்களில் காணப்படுகிறது. நமது சூழலில் ‘நிதர்சனம்.கொம்’, ‘தீப்பொறி.கொம்’ போன்ற ஆயுத அரசியல் சார்ந்த சில ஊடகங்களும், வெறும் பச்சை வியாபார ஊடகங்களுமே இந்த அவதூறுக் கலாச்சாரத்தின் […]

நாயி வாயிச்சீல

தோழமைப் பிரதிகள்

-மு.ஹரி கிருஷ்ணன் அகாலமாக மரணத்தைத் தழுவிய அபிராமிக்கு இந்தக் கதை சமர்ப்பணம் தெரட்டி* முடிஞ்சதும் பொறப்படலாம்னா எங்க முடியிது? சொணையான* இன்னுமே வரிக்கல*. மணி பதனொன்னாவுதோ ! பன்னண்டாவுதோ தெரில. ஆட்டத்துக்கும் போயிக்கிட்டு அலங்காரத்துக்கும் போறதுன்னா சாமானியமா? கயிட்டத்தப்பாத்தா காச கண்ல காங்கிறத்தெப்பிடி? நாமக் கைத்தொட்ட காரியமாறதெப்பிடி?எரநூறு வருதோ முன்னூறு வருதோ நாயனக்காரன இருந்து வாங்கியாடான்னு நாம்ப நம்ம தொந்தரவுக்கு போயிரலாந்தான். ஆனா இண்டம் புடிச்சவன் அதக்கொண்டி எங்கியாச்சும் கூத * கீதப்போட்டுக்கிட்டு வந்திட்டான்னா ஒரே ஒத்தப்பைசாவ […]

எரியும் பிரபஞ்சம் தலையில் சுழல்கிறது

ராஜன் குறை

கடவுளைக் காண விரும்பும் அறிவியலும், காணாமல் போகக் கூடிய பிரபஞ்சமும் எதிர்வரும் செப்டம்பர் 10ம் தேதி ஓர் புதிய அறிவியல் பரிசோதனை தொடங்கவிருக்கிறது. அறிவியல் என்றால் மனிதன் எதையும் அறிந்துகொள்ளாமல் விடக்கூடாதுதானே. இந்த பிரபஞ்சம் ஒன்று இருக்கிறது! எல்லையில்லாமல்!அது எப்படி துவங்கியிருக்கும் என யோசிக்க வேண்டாமா? கடவுள் படைத்தார் என்றோ, அது தான்தோன்றி என்றோ சொல்லிவிட்டு போக முடியுமா? எண்பது ஆண்டுகளாக ஆற்றலைப் பற்றிய புரிதல் வளர்ந்ததையொட்டி, Big Bang Theory என்ற ஆதி வெடிப்பை பற்றிய […]

செங்கரா: மறுக்கப்பட்ட நிலத்திற்காக மற்றுமொரு போராட்டம்

கட்டுரைகள்

-மோனிகா பிரான்சிலுள்ள ‘சயன்ஸ்போ'(science po) என்ற நிறுவனத்தைச் சார்ந்த ஆய்வாளர் கிரிஸ்டோஃபே ஜெபஃர்லோ(Christophe Jaffrelot:Hindu Nationalism-A Reader) தனது ஆய்வில் இந்தியாவிலேயே தொடர்ந்து பார்ப்பனர்கள் அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற பதவி வகிப்பது கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும்தான் என்கிறார். மார்க்ஸியத்தின் மாபெரும் விசுவாசிகளெனப் பறை சாற்றும் கேரள மக்களின் மண்ணில் கடந்த பல மாதங்களாக தலித்துகளும் ஆதிவாசிகளும் ‘செங்கரா’வில் தமது நிலங்களை இழந்து பல்வகை கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இது பற்றி அவ்வப்போது ஆங்கிலப் பத்திரிக்கைகள் வெளியிட்டபோதும் பல […]

நூல் விமர்சன அரங்கு

அறிவித்தல்கள்

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி நடத்தும் நூல் விமர்சன அரங்கு:   இலங்கையில் சாதிய முறையின் தோற்றம், அதன் இயங்குதிசை, தாழ்த்தப்பட்ட மக்களின் சாதியத்திற்கெதரான போராட்டத்தின் நீண்ட வரலாறு, சாதியப் போராட்டத்தில் இடதுசாரிகளின் பங்களிப்பு, தமிழ்த் தேசியமும் சாதியமும் என விரிந்த தளத்தில் வெகுஜனன் (சி.கா. செந்திவேல்) இராவணா (ந.இரவீந்திரன்) இணைந்து எழுதிய வரலாற்று ஆய்வு நூலின் செழுமைப்படுத்தப்பட்ட புதிய பதிப்பு:   “இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்”   தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப்பெரும் தலைவரும், சிறுபான்மைத் […]

நேர்காணல்: மாலதி மைத்ரி

நேர்காணல்கள்

சமகாலத் தமிழ் அரசியல்- இலக்கியச் சூழலில் உறுதியாகவும், உரத்தும், இடையறாது ஒலிக்கும் குரல் மாலதி மைத்ரியுடையது. கவிதைகளில் பெண்மொழியின் உச்சபட்ச சாத்தியத்தை நிகழ்த்திக்கொண்டிருப்பவரும் மாலதி மைத்ரிதான். ‘ஆபாச எழுத்துகள்’, ‘அதிர்ச்சி மதிப்பீட்டுக்கான எழுத்துகள்’ என்றெல்லாம் கலாசார காவலர்கள் இன்றைய பெண் எழுத்துகளை தூற்றும் போதெல்லாம் அந்தக் காவலர்கள் மீதான முதல் அடியாகவும் ஆமான அடியாகவும் மாலதியின் குரல் ஒலிக்கிறது. மாலதி மைத்ரி வெறுமனே இலக்கியச் செயற்பாடுகளோடு நின்றுவிடுபவரல்ல. பெண்ணியம், பெரியாரியல், தலித்தியம், உலகமயமாதலுக்குத் தீவிர எதிர்ப்பு என […]

வெள்ளாள அதிகாரமற்ற வடமாகாண சபை…

கட்டுரைகள்

சுகன்: கட்டுரை தொடர்கிறது… ‘வெய்யிலில் இருந்தாற்தான் நிழலின் அருமை தெரியுமெ’ன்பது முன்னோர் வாக்கு. ‘மூத்தோர் சொல்லும் முதிர்ந்த நெல்லிக்கனியும் முதலில் கசக்கும் பின்னர் இனிக்கும்’ என்பதும் மூத்தோர் வாக்குத்தான். மாவட்ட அபிவிருத்தி சபையை ஏற்பதில் திரு. அமிர்தலிங்கம் அவர்கள் கால அரசியல் விவாதங்களில் ‘மாவிட்டபுர அரசியல்’ பேசுபொருளானதில்லை.அதேபோன்றே வடக்கு – கிழக்கு மாகாண அரசு முதல்வர் வரதராஜப்பெருமாள் அவர்கள் காலத்தில் தமிழ் அரசியலே விவாதத்திற்குள்ளானதில்லை. ஏறக்குறைய வலதுசாரி, இடதுசாரி சனநாயக அரசியற் தலைமைகளின் காலம் விவாதத்திற்கிடமின்றி முடிவிற்குக் […]