ரம்ழான்

கதைகள்

சிறுகதை: ஷோபாசக்தி “பிரான்ஸ் தன்னிடமிருக்கும் கடைசி நாணயத்தையும் தான் கொலனிகளாக வைத்திருந்த நாடுகளுக்கு நட்டஈடாகச் செலுத்த வேண்டியிருக்கிறது, ஒட்டு மொத்தப் பிரஞ்சு தேசமும் அல்ஜீரியாவின் ஏதோவொரு கடற்கரையில் புதைக்கப்பட்டிருக்கும் எனது மரியத்தின் புதைகுழிக்கு முன்னே மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கவேண்டும்! ஜெனரல் சார்ள் து கோல் மன்னிப்புக் கேட்ட வேண்டும்! பாதிரி லூயி டொனார்த் மன்னிப்புக் கேட்க வேண்டும்! சார்த்தருக்கும் விலக்குக் கிடையாது, அவரும் மரியத்திடம் மன்னிப்புக் கேட்கட்டும்! ஒரு பிராயச்சித்தம் நூறு சரிகளுக்குச் சமம்”என்ற திரை எழுத்துகளுடன் […]

வட- கிழக்கு இன்றைய நிலை

கட்டுரைகள்

18.05.2008 ல் சூரிச் நகரில் ‘மனிதவள அபிவிருத்தி ஆய்வு நிறுவனத்தால்’ வட- கிழக்கு இன்றைய நிலை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கைத் தொடக்கி வைத்துத் தோழர். திலக் ஆற்றிய உரை: பிழைப்புவாத தமிழ் அரசியல் கட்சிகளினால் தோற்றுவிக்கப்பட்ட பிரதேசப் பாகுபாடு அரசியலை ஓரம் தள்ளிவிட்டுப் பொது எதிரிக்கு எதிரான ஆயுதப் போராட்டம் என்ற பாதையில் நாம் ஒன்றுபட்டிருந்தோம். வடக்கு – கிழக்கே தாயகப் பிரதேசங்கள் எனக் கூறி சுயநிர்ணயத்தைக் கோரி நின்றோம். சில அமைப்புகள் அதற்கும் அப்பாற் […]

தூரப்பறக்கும் புறாவாரே!

கட்டுரைகள்

-சுகன் பிள்ளையார், பிள்ளையினார், பிள்ளையான், விக்கினேஸ்வர பிள்ளையார் இப்படிப் பல பெயர்கள் தமிழில் பன்நெடுங்காலமுதல் புழக்கத்திலிருந்தாலும் ஒருவிதக் கொச்சைத்தனத்துடனும், வன்மத்துடனும், இழிவரவாகவுமே தமிழ் ஊடகங்களால் விளித்துரைக்கப்பட்டு வரும் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதையொட்டி அரசியல் நாகரீகம் பற்றியும், ஜனநாயக அரசியல் பற்றியும் பெருமிதப்பட்டுக்கொள்ளும் அமைப்புகள் கூட மனமுவந்த வாழ்த்துத் தெரிவிக்க இப்போதும் தயக்கம் காட்டியே வருகின்றன. 1950 களில் துறைநீலாவணையில் பிள்ளையான் தம்பி என்றழைக்கப்படும் தமிழர் அப்போதைய நில ஆக்கிரமிப்பிற்கெதிராக […]

சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!

கட்டுரைகள்

-ராகவன் மகேஸ்வரி வேலாயுதம் (1953- 2008) அது தமிழ் தேசிய விடுதலை இயக்கங்கள் முளைவிட்ட 1972- 1977 காலப்பகுதி! இன்றிருப்பதுபோல் தமிழ் தேசிய இயக்கங்களிடையே பாஸிசமும் கொலைக் கலாச்சாரமும் காணக்கிடைக்காத காலமது. மகேஸ்வரி அக்கா சட்டக் கல்லூரி மாணவியாகவும், தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் உறுப்பினருமாயிருந்தார். அக்கால கட்டத்தில் ஒரு இளம்பெண் அரசியலில் ஈடுபடுவதென்பது ஒன்றும் எளிதான நிகழ்வல்ல. 1977 வன்செயல்கள் தமிழ் மக்களை அகதிகளாக்கி இடம்பெயரச் செய்ய மகேசக்கா இடம்பெயர்ந்தவர்களுக்காக உழைப்பதற்குத் தன்னை தயார்ப்படுத்தினார். அவர், […]

கிழக்கிலங்கைத் தேர்தல்

கட்டுரைகள்

– இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். வெளிநாடுகளிலிருந்து கொண்டு அறிக்கைவிடும் போலிப் புரட்சிவாதிகள், கிழக்கு மக்களில் எந்தக் கரிசனமும் அற்றவர்கள். தங்கள் அமைப்புக்களில் கிழக்கு மக்களைத் ‘தீண்டாச்சாதியாக’ நடத்துபவர்கள். இவர்கள் பார்வையில் கிழக்கு மக்கள் ‘மோர்தின்னி முட்டாள்க’ளாகும். இந்தக் கேவலங்களின் குரலைக் கேட்காமல் கிழக்கிலங்கை மக்கள் தங்கள் பிரச்சினையைத் தங்கள் கையில் எடுத்துத் தங்கள் தலைமையைத் தேடவேண்டும். எதிர்வரும் 10.05.08ல் நடக்கவிருக்கும் கிழக்கலங்கைத்தேர்தல், இலங்கையில் இதுவரை நடந்த தேர்தல்களைவிட மிகவும் முக்கிய தேர்தலாக அமையவிருக்கிறது. ஜனநாயக சமுதாய அமைப்பின் முக்கிய […]

அறிக்கை

அறிவித்தல்கள்

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயகத்தைப் பேணுவோம்! தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துவோம்!! எதிர்வரும் மே மாதம் 10ம் திகதி கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல் தொடர்பாக கிழக்கு வாழ் தமிழ் – முஸ்லிம் மக்கள் தமது ஆழ்ந்த அக்கறையையும் தெளிவான நிலைப்பாட்டையும் எடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணச்சபைத் தேர்தல் கிழக்கு வாழ் தமிழ் – முஸ்லிம் மக்களின் எதிர்கால வாழ்வுடன் தொடர்புற்று இருப்பதாலும் வேறு எந்தத் தேர்தலிலும் இல்லாத […]