என் கதை
கே.டானியல் எழுத்து எனக்குத் தொழில் அல்ல, பொழுதுபோக்குமல்ல. ஏறக்குறைய நான் எழுதத் தொடங்கிய காலத்தை 35 வருடங்களுக்கு உட்படுத்தலாம். இந்த 35 வருடகால எல்லைக்குள் சுமார் 10 ஆண்டு காலத்தைச் சிறுசிறு மன ஆசைகளுக்காகவும், விளம்பர மோகத்துக்காகவும் இவைகளோடு ஒட்டிய காரண காரியங்களுக்காகவும் செலவு செய்தேன் என்று சொல்வதில் வெட்கப்பட வேண்டியதில்லை. கிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே வாழ்ந்த எனக்கு கிராமப்புறங்களையும், கிராமப்புற மக்களையும் சந்தித்துப் பேசிப் பழகிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது. அத்துடன் சுமார் 2O வயது […]
தலித் மாநாடு – பிரான்ஸ்
யுகத்தை விழுங்கும் இருள்
-பாலைநகர் ஜிஃப்ரியின் கவிதையொன்று-
விடுதலையின் பாதைகள்
மார்க்ஸியத்திற்குப் பிந்திய சிந்தனைப் போக்குகளான இருத்தலியல், அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற நுண் அரசியல் சிந்தனைகள் யாரும் விரும்பியோ விரும்பாமலோ கடந்த இருபது ஆண்டுகளாகத் தமிழ் அறிவுச் சூழலில் முக்கிய சிந்தனைமுறைமைகளாக நிலைபெற்றுவிட்டன. இந்தப் புதிய சிந்தனைமுறைகளை எதிர்கொண்டு எழுதிய தமிழ் எழுத்தாளர்களை ஒரு ‘மதிப்பீட்டு’ வசதிக்காக மூன்று பிரிவுகளாகத் தொகுத்துக்கொள்ள முடியும். இச்சிந்தனை முறைகளை அக்கறையோடு உள்வாங்கி இவற்றிற்கும் நமது அரசியல், பண்பாட்டுச் சூழல்களுக்குமான பொருத்தங்களையும் பொருத்தப்பாடின்மைகளையும் சீர்தூக்கி இச்சிந்தனைகளை தமிழ் அறிவுப்புலத்திற்கு அறிமுகப்படுத்தியவர்களை முதல் பிரிவினர் […]
வெளிவந்துவிட்டது…
கே.டானியல், எஸ்.பொ, டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன், தெணியான், பெனடிக்ற் பாலன், நந்தினி சேவியர், தேவா, அருந்ததி, அ.தேவதாசன், மா. பாலசிங்கம் ஆகிய பதினொரு எழுத்தாளர்களின் பதின்நான்கு கதைகளும், மற்றும் கே.டானியலின் ‘பஞ்சமர்’ நாவலிலிருந்தும் என்.கே. ரகுநாதனின் தன்வரலாறு நூலான ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’யிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளும். தொகுப்பாசிரியர்: சுகன் வெளியீடு: நிச்சாமம் பதிப்பகம், பிரான்ஸ். முன்னுரை -அ.மார்க்ஸ் தலித் இலக்கியத்தில் ஈழம் தமிழகத்திற்கு முன்னோடி. ஈழத் தலித் எழுத்தாளர்கள் பதினொருவர் 1951 தொடங்கி 2006 […]
நோயா துன்பம்? மருந்தா துன்பம்? – வ.அழகலிங்கம்
சிங்களவன் தமிழனுக்கும் கட்டாயக் கல்வியையும் கட்டாய நோய்தடுப்பையும் திணித்தான். தமிழனோ கட்டாயப் பிள்ளைபிடியைப் பரிசளித்தான், இதுதான் எங்களது சரித்திரம்! வ.அழகலிங்கம் இலங்கை முதலாளித்துவ இராஜபக்க்ஷ அரசாங்கம் தொப்பிக்கலை வெற்றியைச் சொன்ன மறுகணமே திருகோணமலையில் 1600 ஏக்கர் நிலத்தை அரச மற்றும் தனியார் பொருளாதார நிறுவனங்களுக்கு வழங்கி ஒரு பொருளாதார வலயத்தை உண்டுபண்ணப் போவதாக சன்டேஒவ்சேவர் (15.07.2007) செய்திவெளியிட்டுள்ளது. இந்தக் கூற்றை (BOI) முதலீட்டுத் திணைக்களப் பொது முகாமையாளர் எல். டிக்மன் கூறியுள்ளார். அங்கே 15 மில்லியன் ரூபா […]