யுத்தத்தை நிறுத்தியிருந்த போது…

தோழமைப் பிரதிகள்

க.யசோதரா 1 இன்னுமொரு கொலை நாள்! படுவான்கரைகளில் எக்ஸ் – எக்ஸ் அம்மான் தன் அண்ணரைத் தேடி அலைகிறார் அண்ணன் பெம்மானை… அங்குமிங்குமென அண்ணனும் தம்பியும் தம் எதிரியரைத் தேடித் திரிகிறார் நான் என்னைத் தேடுகிறேன் கொலைகள் எனது கனவை அழித்தன கொலைகள் எனது இரவை அழித்தன என்னுடைய இருபத்தோராவது பிறந்த தினத்திற்கு சில நாட்களுக்கு முன் அவர்கள் என்னை அழிக்கு முன் புறநானூறும் கந்தபுராணக் காவியங்களும் எனது வீட்டில் தீக்கிரையாகின என் கைகளின் இரத்தக் கறை […]

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !!!!

கட்டுரைகள்

“சாத்தானுக்கு இரண்டு நாக்கு (சிக்மன்) பிராயிட்டுக்கு ஆயிரம் நாக்கு உருத்திரமூர்த்தி சேரனுக்கு பல்லாயிரம் நாக்கு” என்ற தலைப்பில் தேனி இணையத் தளத்தில் க.மகாதேவன் எழுதிய கட்டுரையை தொடர்ந்து; “அவதூறுகளுக்குப் பதில் எழுதுவதில் பயனில்லை என்பதுதான் எனது நிலைப்பாடாக இருந்தது..”எனும் ‘கோபுரம்’ உருத்திரமூர்த்தி சேரன் அவர்கள் க.மகாதேவன் கட்டுரைக்கு “மாடு முட்டி கோபுரங்கள் சாய்வதில்லை” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையை எழுதித் தள்ளியிருக்கிறார்.. “மாடு முட்டி கோபுரங்கள் சாய்வதில்லை” இனி பள்ளத்திலிருந்து சுகன். கோபுர தரிசனம் கோடி […]

இறுதிக் கடவுள்

கட்டுரைகள்

    சூரிய தேவன் என்றும் நாம் அவரை அழைத்தோம் இருளின் சக்கரவர்த்தி என்றும் அழைத்தோம். பேராபத்தான கடவுளென்றும் கல்லையும் உயிர்த்துக் கயவரை அழிக்கும் கானுறை தெய்வமென்றும் அழைத்தோம். குடும்பத்திலிருந்து  ஒருவரைக் கேட்டுக் கொண்டிருந்ததால் பகாசுரன் என்றும் அழைத்தோம். பின் நவீனத்துவ, நவீனத்துவ, வரலாற்று வரலாற்றுக்கு முன்னான, காட்டுமிராண்டி விலங்குக் காலங்களனைத்தையும் புரட்டி மாற்றிடும் யுகபுருஷன் என்றும் அழைத்தோம். “உன்னைப் புதைத்த புதைகுழியிலும் இடிவிழ” என்றும் அவரைச் சபித்தோம். அவர் அற்புதங்கள் நிகழ்த்துவார் எனக் காத்திருந்தோம் இறந்தோரை […]

முட்டாள்களின் ஊர்வலம்

அறிவித்தல்கள்

 இன்று (03.09.2006) பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் மாணிக்க விநாயகர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான ஈரோக்களைச் செலவு செய்து முற்றுமுழுதான சமஸ்கிருத வழிபாட்டு முறையில் விடப்பட்ட தேரோட்டத்தில் தேர்களில் கடவுள் பொம்மைகளையும் உயிருள்ள பார்ப்பனர்களையும் உட்காரவைத்து நமது அகதிச் சமூகம் பாரிஸ் வீதிகளில் முதுகு முறிய இழுத்து வந்தது. இந்த ஆயிரமாண்டு கால இழிவையும் அவமானத்தையும் சுட்டிக்காட்டி விழிப்புணர்வுப் பரப்புரையில் இறங்கிய “பெரியார் கல்வி வட்டத்தினர்” தேர் இழுக்கப்பட்ட பகுதிகளில் சுவரொட்டிப் பிரச்சாரம் செய்திருந்தனர். […]

உரையாடல் தொடர்கிறது

கட்டுரைகள்

வடமராட்சி 18.07.2006  அன்புடன் தோழருக்கு நீங்கள் அனுப்பிய அநிச்ச 2005 மார்ச் 2006 இதழ்கள் கிடைத்தன. இதழ்கள் காத்திரமாக வந்துள்ளன அ.மார்க்சின் ‘பார்ப்பனர்கள் அரங்கேற்றும் ஆரியக்கூத்து’ கட்டுரை மிக விரிவாகவும் ஆழமாகவும் எழுதப்பட்டுள்ளது. வரலாறுகள் உண்மையானதாய் எழுதப்படல் வேண்டும். மகாகவியிடம் மாத்திரமல்ல, ஈழத்தவர்கள் பலரிடம் சாதியம் மறையாமலே இருக்கின்றது. ஒவ்வொரு சாதியும் தனக்கு கீழ் உள்ள சாதியை மிதிப்பதிலேயே கருத்தாக இருக்கின்றது. ஒரு முற்போக்குக்காரருடன் கதைத்துக் கொண்டிருந்த பொழுது ஊரின் மறுபகுதியில் வசிப்பவர்களைச் சுட்டி ‘நாங்கள் அங்கு […]

நூல் அறிமுகம் – தியோ

தோழமைப் பிரதிகள்

…….சுணைக்கிது சிறுகதைகள் நிரூபா குஞ்சிஐயா, குஞ்சியம்மா, ஜீவி, ஜீவன், நிர்மலா, விசயா, கேதீஸ், நிரூபா, சோதி, குமரன், ஜெகதீஸ்வரன், பிரபாகரன், ஜீவனா, நந்தினி, மதியழகன், கலா அக்கா, மலர் அக்கா, நித்தியண்ண, விலாசய்யா, ராசமணி, ஆச்சி, அப்பு, கணபதி.. என்று ஒரு அயல் அட்டமே, ஒரு சிறு கிராமமே நிரூபாவின் புனைவுலகில் நமக்கு அறிமுகமாகி மெல்ல மெல்ல அவர்கள் நம்மோடும் நெருக்கமாகி விடுகிறார்கள். அவர்களது மன எழுச்சிகள்,பிரிவுகள், சந்திப்புக்கள், வெறுமைகள், துரோகங்கள், எழுத்தெழுத்தாகத் திரும்பத் திரும்ப நிரூபாவால் […]

சுகனின் கவிதைகள்

கட்டுரைகள்

விழித்திருப்பவனின் மறுநாள் தோழர் சண்முகலிங்கம் கனடாவிலிருந்து வந்து சொன்னது: நாங்கள் ஊரில இருக்கேக்கை வெள்ளாளன் எங்களைப் படிக்கவேவிடயில்லை. இங்கை வந்து படிக்க வெளிக்கிட்டால் தமிழைப் படி என்கிறான். அவங்கள் ஊரிலையும் ஆங்கிலத்திலைதான் படிச்சாங்கள். இங்கையும் ஆங்கிலத்திலைதான் படிக்கிறாங்கள். என்னென்றால்: இரண்டு கிழமை வந்து நின்று கலைச் செல்வனைச் சந்திக்க முடியவில்லை முதல் நாளிரவு ரெலிபோனில் கதைத்திருக்கிறார். ‘நாளை விடிய வீட்டை வாங்கோ நிற்பேன்’ என்றிருக்கிறார் கலைச்செல்வன். விடிய வந்தபோது ஆறாம் மாடியிலிருந்து கலைச் செல்வனின் உடலைத்தான் அவரால் […]