கடவுளைக் காண விரும்பும் அறிவியலும், காணாமல் போகக் கூடிய பிரபஞ்சமும் எதிர்வரும் செப்டம்பர் 10ம் தேதி ஓர் புதிய அறிவியல் பரிசோதனை தொடங்கவிருக்கிறது. அறிவியல் என்றால் மனிதன் எதையும் அறிந்துகொள்ளாமல் விடக்கூடாதுதானே. இந்த பிரபஞ்சம் ஒன்று இருக்கிறது! எல்லையில்லாமல்!அது எப்படி துவங்கியிருக்கும் என யோசிக்க வேண்டாமா? கடவுள் படைத்தார் என்றோ, அது தான்தோன்றி என்றோ சொல்லிவிட்டு போக முடியுமா? எண்பது ஆண்டுகளாக ஆற்றலைப் பற்றிய புரிதல் வளர்ந்ததையொட்டி, Big Bang Theory என்ற ஆதி வெடிப்பை பற்றிய […]
செங்கரா: மறுக்கப்பட்ட நிலத்திற்காக மற்றுமொரு போராட்டம்
-மோனிகா பிரான்சிலுள்ள ‘சயன்ஸ்போ'(science po) என்ற நிறுவனத்தைச் சார்ந்த ஆய்வாளர் கிரிஸ்டோஃபே ஜெபஃர்லோ(Christophe Jaffrelot:Hindu Nationalism-A Reader) தனது ஆய்வில் இந்தியாவிலேயே தொடர்ந்து பார்ப்பனர்கள் அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற பதவி வகிப்பது கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும்தான் என்கிறார். மார்க்ஸியத்தின் மாபெரும் விசுவாசிகளெனப் பறை சாற்றும் கேரள மக்களின் மண்ணில் கடந்த பல மாதங்களாக தலித்துகளும் ஆதிவாசிகளும் ‘செங்கரா’வில் தமது நிலங்களை இழந்து பல்வகை கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இது பற்றி அவ்வப்போது ஆங்கிலப் பத்திரிக்கைகள் வெளியிட்டபோதும் பல […]
நூல் விமர்சன அரங்கு
இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி நடத்தும் நூல் விமர்சன அரங்கு: இலங்கையில் சாதிய முறையின் தோற்றம், அதன் இயங்குதிசை, தாழ்த்தப்பட்ட மக்களின் சாதியத்திற்கெதரான போராட்டத்தின் நீண்ட வரலாறு, சாதியப் போராட்டத்தில் இடதுசாரிகளின் பங்களிப்பு, தமிழ்த் தேசியமும் சாதியமும் என விரிந்த தளத்தில் வெகுஜனன் (சி.கா. செந்திவேல்) இராவணா (ந.இரவீந்திரன்) இணைந்து எழுதிய வரலாற்று ஆய்வு நூலின் செழுமைப்படுத்தப்பட்ட புதிய பதிப்பு: “இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்” தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப்பெரும் தலைவரும், சிறுபான்மைத் […]
நேர்காணல்: மாலதி மைத்ரி
சமகாலத் தமிழ் அரசியல்- இலக்கியச் சூழலில் உறுதியாகவும், உரத்தும், இடையறாது ஒலிக்கும் குரல் மாலதி மைத்ரியுடையது. கவிதைகளில் பெண்மொழியின் உச்சபட்ச சாத்தியத்தை நிகழ்த்திக்கொண்டிருப்பவரும் மாலதி மைத்ரிதான். ‘ஆபாச எழுத்துகள்’, ‘அதிர்ச்சி மதிப்பீட்டுக்கான எழுத்துகள்’ என்றெல்லாம் கலாசார காவலர்கள் இன்றைய பெண் எழுத்துகளை தூற்றும் போதெல்லாம் அந்தக் காவலர்கள் மீதான முதல் அடியாகவும் ஆமான அடியாகவும் மாலதியின் குரல் ஒலிக்கிறது. மாலதி மைத்ரி வெறுமனே இலக்கியச் செயற்பாடுகளோடு நின்றுவிடுபவரல்ல. பெண்ணியம், பெரியாரியல், தலித்தியம், உலகமயமாதலுக்குத் தீவிர எதிர்ப்பு என […]
வெள்ளாள அதிகாரமற்ற வடமாகாண சபை…
சுகன்: கட்டுரை தொடர்கிறது… ‘வெய்யிலில் இருந்தாற்தான் நிழலின் அருமை தெரியுமெ’ன்பது முன்னோர் வாக்கு. ‘மூத்தோர் சொல்லும் முதிர்ந்த நெல்லிக்கனியும் முதலில் கசக்கும் பின்னர் இனிக்கும்’ என்பதும் மூத்தோர் வாக்குத்தான். மாவட்ட அபிவிருத்தி சபையை ஏற்பதில் திரு. அமிர்தலிங்கம் அவர்கள் கால அரசியல் விவாதங்களில் ‘மாவிட்டபுர அரசியல்’ பேசுபொருளானதில்லை.அதேபோன்றே வடக்கு – கிழக்கு மாகாண அரசு முதல்வர் வரதராஜப்பெருமாள் அவர்கள் காலத்தில் தமிழ் அரசியலே விவாதத்திற்குள்ளானதில்லை. ஏறக்குறைய வலதுசாரி, இடதுசாரி சனநாயக அரசியற் தலைமைகளின் காலம் விவாதத்திற்கிடமின்றி முடிவிற்குக் […]
21ம் நூற்றாண்டில் விடுதலைப் போராட்டங்கள்
1983 ஜுலைப் படுகொலைகளை நினைவுகூர்ந்து 27 ஜுலை 2008 அன்று பிரான்ஸில் நடைபெற்ற ‘நெடுங்குருதி’ நிகழ்வில் தோழர்.அ.மார்க்ஸ் ஆற்றிய உரைவீச்சு: தலைமை ஏற்றுள்ள தோழர் ராகவன் அவர்களே, நண்பர்களே வணக்கம். வெலிகடைச் சிறைப் படுகொலை மற்றும் அதைத் தொடர்ந்த தமிழ் இன அழிப்புக் கொலைகளின் 25ம் ஆண்டு நினைவையொட்டிக் காலை முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிகழ்வில் பல்வேறு கோணங்களிலிருந்து பார்வைகள் வெளிப்பட்டன. வெலிகடைப் படுகொலையின் போது தப்பிப் பிழைத்தவர்கள், முஸ்லிம்கள், கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனப் பலகோணங்களிலிருந்து […]
நெடுங்குருதி: உரையாடல் தொடர்கிறது!
-சுகன் 27. 07. 2008ல் பிரான்சில், 1983 யூலைப் படுகொலைகளை நினைவு கூர்ந்த “நெடுங்குருதி” நிகழ்வு மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகியது. ராகவனின் நெறிப்படுத்தலில் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாகவும், அரசியற் பிரக்ஞையுடனும், பொறுப்புணர்வோடும் நடைபெற்றது. வெலிகடையிலும் யூலை வன்செயல்களில் தொடரும் யுத்தத்திலும் மரணித்தவர்களுக்கான அஞ்சலியுடன் தொடங்கிய நிகழ்வில் ராகவன் இந்த நிகழ்வின் முக்கியத்துவம், இரட்டை அதிகார சக்திகளான அரசு- புலிகள் இடையில் சிக்குண்டு அல்லல்படும் தமிழ் மக்களின் கையறுநிலை, ஈழப் போராட்டம் கடந்து வந்த பாதை இவை […]